”இன்னும் 10 ஆண்டுகளில் உங்களை பற்றி விசாரிப்பேன்” மாணவர்களுக்கு ஆட்சியர் உற்சாக டானிக்!

 

”இன்னும் 10 ஆண்டுகளில் உங்களை பற்றி விசாரிப்பேன்” மாணவர்களுக்கு ஆட்சியர் உற்சாக டானிக்!

“சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும் இல்லை என்றால் விட்டுவிடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன்”

திருநெல்வேலி, கடையநல்லூர் அருகே மடத்துப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஸ் கலந்துரையாடினார். மாணவ மாணவிகளுக்கு அறிவுரை கூறும்விதமாக ஆட்சியர் பேசியதாவது: ”இன்னும் 10 ஆண்டுகளுக்குப் பிறகு இதே தேதியில் நீங்கள் என்னவாக இருக்கவேண்டும் என்பதை இப்போதே முடிவு வேண்டும். மாடியிலுள்ள குடிநீர் தொட்டியை பார்க்க ஆசைப்பட்டால், ஏணி வைத்து ஒவ்வொரு படியாக ஏறினால்தான் தொட்டியை பார்க்க முடியும். இருந்த இடத்திலிருந்தே தொட்டியை பார்க்க முடியாது, அதேபோல், ஏணியின் நான்கு படிகளையும் ஒரே தாண்டலில் தாண்டகூடாது, அது தோல்வியில்தான் முடியும்.

Collector visits Govt School

நம்முடைய குறிக்கோளை, கனவைச் சொல்லும் போது நமது நண்பர்கள்கூட சிரிப்பார்கள். எப்படி அது முடியும் எனக் கேட்பார்கள். நான் எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆக விரும்புகிறேன் எனகூறியபோது, எனது நண்பர்கள் உன்னால் எப்படி முடியும் என கேட்டு சிரித்தார்கள். என்னை நம்பவில்லை. ஆனாலும், நான் விடாமுயற்சியுடன் முயற்சித்தேன். ஐ.ஏ.எஸ். அதிகாரியகவே உயர்ந்தேன். சும்மா முயற்சி செய்து பார்ப்போம்; வந்தால் வரட்டும் இல்லை என்றால் விட்டுவிடுவோம் என நினைக்காமல் தொடர்ந்து முயற்சி செய்யவேண்டும். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து நிச்சயம் நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நான் விசாரிப்பேன்” என்ற ஆட்சியரின் அக்கறை வெளிப்பட்டபோது மாணவிகள் கரவொலி எழுப்பி மகிழ்ச்சி தெரிவித்தனர்.