இன்னும் சில நிமிடங்களில் வேளாண் மண்டலம் சட்ட மசோதா தாக்கல்!

 

இன்னும் சில நிமிடங்களில் வேளாண் மண்டலம் சட்ட மசோதா தாக்கல்!

நேற்று சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஹைட்ரா கார்பன், மீத்தேன் உள்ளிட்ட திட்டங்களினால் வேளாண் நிலங்கள் நாசமாவதால் அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தனர். கிட்டத்தட்ட 3 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களது கோரிக்கைக்கு செவிசாய்த்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்டா மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்படும் என்றும் வேளாண் மண்டலங்களைப் பாதுகாக்கத் தனிச் சட்டம் கொண்டு வரப்படும் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

ttn

அதனைத்தொடர்ந்து நேற்று சட்டப்பேரவையில், காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள விவசாய நிலங்கள் பாதுகாக்கப் பட்ட பகுதியாக அறிவிக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிலையில், இது தொடர்பாக நேற்று முதல்வர் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் வேளாண்துறை அமைச்சர் துரைக்கண்ணு டெல்டா பகுதிகளைப் பாதுகாக்கப் பட்ட வேளாண் மண்டலமாக மேம்படுத்துதல் மசோதாவைத் தாக்கல் செய்ய உள்ளார்.