‘இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு’…உங்க பான் கார்டை ஆதாருடன் இணைக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்!

 

‘இன்னும் இரண்டு நாள் தான் இருக்கு’…உங்க பான் கார்டை ஆதாருடன் இணைக்கணுமா? இதை மட்டும் செய்யுங்க போதும்!

ஆதாருடன்  பான் எண்ணை  இணைக்க  வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

பான் எண்ணுடன், ஆதார் எண்ணை கட்டாயம் இணைக்கவேண்டும் என்று மத்திய அரசு அறிவித்தது. அதன்படி  செப்டம்பர் 30-க்குள் பான் எண்ணை  ஆதாருடன் சேர்க்காவிட்டால் அக்டோபர் 1 முதல்  பான்  அட்டை காலாவதியாகும் என்று  மத்திய அரசு அறிவித்திருந்தது. இருப்பினும் அதற்கான காலக்கெடுவை மத்திய அரசு நீடித்தது. அந்த வகையில் வரும் 31 ஆம் தேதிக்குள் ஆதாருடன்  பான் எண்ணை  இணைக்க  வேண்டும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது.

ஒருவேளை நீங்கள் இன்னும் உங்கள் பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் கவலை வேண்டாம்.. இந்த செய்தியை படித்து விரைவாக வேலையைச் செய்து முடியுங்கள். 

1. incometaxindiaefiling.gov.in என்ற தளத்திற்கு செல்லவும்

2. Quick Links என்பதன் கீழுள்ள Link Aadhaar என்பதை கிளிக் செய்யவும்

 

3. அப்போது திரையில், பான் எண், ஆதார் எண் உள்ளிட்டவற்றைப் பதிவு செய்யத் தேவையான டேப் ஒன்று தோன்றும். அதில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களைப் பூர்த்தி செய்து உங்கள் ஆதாருடன்  பான் எண்ணை இணைக்கலாம். 

4. ஏற்கெனவே இணைக்கப்பட்டிருந்தால், அது குறித்த தகவல் காண்பிக்கும்.

மறந்துடாதீங்க… இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளது.  உடனே பான் எண்ணுடன், ஆதார் எண்ணை இணைச்சிடுங்க!