இன்னும் ஆறே நாட்கள் மட்டுமே அத்தி வரதர் தரிசனம்: ஒரே நாளில் 3 லட்சம் பேர் வருகை!

 

இன்னும் ஆறே நாட்கள் மட்டுமே அத்தி வரதர்  தரிசனம்: ஒரே நாளில் 3 லட்சம் பேர் வருகை!

அத்தி வரதர்  இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே காட்சியளிக்கவுள்ள நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

இன்னும் ஆறே நாட்கள் மட்டுமே அத்தி வரதர்  தரிசனம்: ஒரே நாளில் 3 லட்சம் பேர் வருகை!

காஞ்சிபுரம் : அத்தி வரதர்  இன்னும் ஆறு நாட்கள் மட்டுமே காட்சியளிக்கவுள்ள நடைபெறவுள்ள நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. 

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நீருக்குள் இருக்கும் அத்தி வரதரை  வெளியே எடுத்து, ஒரு மண்டலம் பூஜை செய்து மீண்டும் அனந்த சரஸ் குளத்தில் வைத்துவிடுவது வழக்கம். அதன்படி அத்தி வரதர் விழா கடந்த 1-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. தற்போது அத்தி வரதர் நின்ற கோலத்தில் அருள்பாலித்து வருகிறார். 

இந்நிலையில், 41-ம் நாளான இன்று, ஊதா நிறம் கொண்ட பட்டாடை அணிந்து, வண்ண மலர் அலங்காரத்துடன் அத்தி வரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார். விடுமுறை தினம் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள்  கூட்டம் அலைமோதத் தொடங்கியது. இதனால் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், 10,000 காவலர்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அத்தி வரதர் வரும் 16 ஆம் தேதி வரையிலேயே பக்தர்களுக்குக் காட்சியளிக்கவுள்ள நிலையில் நேற்று  மட்டும், மூன்று லட்சத்து ஐம்பதாயிரம் பக்தர்கள் அத்தி வரதரை  தரிசித்துவிட்டுச் சென்றனர். மொத்தம்  இதுவரை 74 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்களும் அத்தி வரதரைத் தரிசனம் செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.