இன்டெல் கோர் பிராசஸர் கொண்ட ‘மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7’ லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்

 

இன்டெல் கோர் பிராசஸர் கொண்ட ‘மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7’ லேப்டாப் மாடல் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் ப்ரோ 7 லேப்டாப் மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் சர்ஃபேஸ் ப்ரோ எக்ஸ் லேப்டாப் மாடலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் எஸ்.கியூ.1 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் சர்ஃபேஸ் ப்ரோ 7 சிறப்பம்சங்களாக 12.3 இன்ச் பிக்சல் சென்ஸ் டிஸ்ப்ளே, சர்ஃபேஸ் பென், அதிகபட்சமாக குவாட்கோர் 10-ஆம் தலைமுறை இன்டெல் கோர் ஐ7 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், அதிகபட்சம் 256 ஜிபி மெமரி, 8 எம்.பி பிரைமரி கேமரா, 1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி. வீடியோ ரெக்கார்டிங், 5 எம்.பி செல்ஃபி கேமரா, 1.6 வாட்ஸ் ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ பிரீமியம், டூயல் ஃபார் ஃபீல்டு ஸ்டூடியோ மைக், வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி டைப்-ஏ, யு.எஸ்.பி. டைப்-சி, 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், மினி டிஸ்பிளே போர்ட், சர்ஃபேஸ் கனெக்ட், சர்ஃபேஸ் டைப் கவர் போர்ட், 13 மணி நேர பேட்டரி பேக்கப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிளாட்டினம், மேட் பிளாக் நிறங்களில் இந்த சாதனம் கிடைக்கும். ஃப்ளிப்கார்ட் மற்றும் அமேசான் தளங்களில் இந்த புதிய லேப்டாப் மாடல் விற்பனை செய்யப்படுகிறது. அதிகபட்சமாக இன்டெல் கோர் ஐ7 10-ஆம் தலைமுறை 16ஜிபி ரேம் + 256ஜிபி மெமரி விலை ரூ.1,37,990 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.