இன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்…

 

இன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.19 ஆயிரம் கோடி வருவாயை இழந்த இந்திய பொருளாதாரம்…

நம் நாட்டில் 2017ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் இன்டர்நெட் முடக்கத்தால் இந்திய பொருளாதாரம் ரூ.19,434 கோடி வருவாயை இழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாம் இப்போது டிஜிட்டல் உலகில் வாழ்ந்து வருகிறோம். இன்டர்நெட் இல்லையென்றால் எந்தவொரு செயலும நடக்காது என்ற நிலை தற்போது உள்ளது. மேலும் இன்டர்நெட்டால் தகவல்தொடர்பு பரிமாற்றம் மிக வேகமாக மாறி விட்டது. அதேசமயம் சில நேரங்களில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக, தவறான மற்றும் விஷம தகவல்கள் பரவி எந்தவொரு அசம்பாவித சம்பவங்களும் நிகழாமல் இருக்க இன்டர்நெட்டை முடக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு அரசுகள் உத்தரவு பிறப்பிக்கின்றன. 

இன்டர்நெட் முடக்கம்

இன்டர்நெட்டை முடக்குவது என்பது ஒரு பக்கம் சரியாக தோன்றினாலும், அதில் பேச்சு சுதந்திரம் தொடர்பான விவகாரமும் உள்ளது. மேலும், நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு இன்டர்நெட் முடக்கத்தால் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக இந்திய செல்லுலார் ஆப்ரேட்டர்ஸ் சங்கத்தின் தலைமை இயக்குனர் ராஜன் மேத்யூஸ் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

இன்டர்நெட் முடக்கம்

சர்வதேச பொருளாதார உறவுகள் குறித்து இந்திய ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, நம் நாட்டில் கடந்த 2012 முதல் 2017ம் ஆண்டு வரையிலான 6 ஆண்டுகளில் இன்டர்நெட் முடக்கத்தால், இந்திய பொருளாதாரம் ரூ.19,434.7 கோடி வருவாயை இழந்துள்ளது. அந்த ஆண்டுகளில் 12,615 மணி நேரம் மொபைல் இன்டர்நெட்டை முடக்கியதால் ரூ.15,151.4 கோடியும், லேண்ட்லைன் இன்டர்நெட் முடக்கத்தால் ரூ.4,337 கோடியும் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. சாப்ட்வேர் ப்ரீடம் லா சென்டர் அறிக்கையின்படி, 2012ம் ஆண்டு முதல் இதுவரை 382 முறை இன்டர்நெட் முடக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 4 முறை இன்டர்நெட்டை முடக்க அரசுகள் உத்தரவு பிறப்பித்துள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.