இன்ஜினியர் கண்டுபிடித்தது விக்ரம் லேண்டரின் பாகங்களா ?..மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

 

இன்ஜினியர் கண்டுபிடித்தது விக்ரம் லேண்டரின் பாகங்களா ?..மயில்சாமி அண்ணாதுரை விளக்கம்

முதன்முதலாக இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் அதனைக் கண்டுபிடித்துள்ளான். அவரின் முயற்சிக்கு நாசா அங்கீகாரம் கொடுத்துள்ளது.

விக்ரம் லேண்டரின் பாகங்களைச் சென்னையைச் சேர்ந்த பொறியாளர் கண்டுபிடித்தது குறித்து  இஸ்ரோ முன்னாள் இயக்குநர் டாக்டர் மயில்சாமி அண்ணாதுரை பிரபல செய்தி நிறுவனத்திற்குப் பேட்டி அளித்துள்ளார். 

ttn

அதில் ‘அமெரிக்க விண்வெளி மையமான நாசா ஆர்பிட்டரின் எடுத்த புகைப்படங்களை வெளியிடும். அதில் ஏதேனும் இருப்பதைக் கண்டுபிடித்து மக்கள் நாசாவிற்கு தெரிவிக்கலாம், அந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் அதனைக் கண்டுபிடித்தவர்களின் பெயரையே அதற்குச் சூட்டும். இது வழக்கமான செயல் தான். முதன்முதலாக இந்தியாவில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவன் அதனைக் கண்டுபிடித்துள்ளான். அவரின் முயற்சிக்கு நாசா அங்கீகாரம் கொடுத்துள்ளது. இஸ்ரோவோ, நாசாவோ லேண்டரை கண்டுபிடிக்கத் தவறிவிட்டது என்று பார்க்காமல் தமிழ்நாடு இளைஞர் கண்டு பிடித்தார் என்று பாராட்ட வேண்டும்’ என்று 
தெரிவித்துள்ளார்.

ttn

அதனைத் தொடர்ந்து, ‘விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி சிறப்பாக தான் செயல்பட்டது. கடைசி 2 கி.மீ இருக்கும் போது தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அதனால், இலக்கை அடைய முடியவில்லை. சந்திராயன்-3 செலுத்தும் போது இது ஒரு நல்ல பாடமாக அமையும். அமெரிக்காவை உடனடியாக தகவல்கள் கொடுப்பது போல இஸ்ரோவால் கொடுக்க முடியாது. ஏனெனில், செயற்கைக்கோளில் சிக்னல் கிடைப்பதற்கே 6 மாதங்கள். அதனை சரிசெய்ய முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம். நாசா மாதிரியே இஸ்ரோவும் தகவல்களை பொது மக்களுக்கு வழங்கும் நாட்கள் விரைவில் வரும் என்று நினைக்கிறேன்’என்றார்.

ttn

இதனையடுத்து, நாசா கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவதைப் போல இஸ்ரோவும் வழங்கும் என நநினைக்கிறன். அந்த இளைஞரின் மூலம் செயற்கைக் கோள் எவ்வாறு விண்வெளி மையங்களைத் தொடர்பு கொள்வது என்று அனைவருக்கும் தெரிந்திருக்கும். இதன் மூலம், பல கண்டுபிடிப்புகள் வெளியே வரும். தனியாரின் முயற்சிக்கு இஸ்ரோ அங்கீகாரம் வழங்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்தார். 

ttn

இந்த பேட்டியில் மயில்சாமி அண்ணாதுரை, அந்த பொறியாளர் விக்ரம் லேண்டரை தான் கண்டுபிடித்தாரா இல்லையா என்பதை தாண்டி, தனியார் கண்டுபிடிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று தெரிவிக்கிறார். ஆனால், இன்று காலை பேசிய இஸ்ரோ தலைவர் சிவன் ‘இஸ்ரோ விக்ரம் லேண்டரை ஏற்கனவே கண்டுபிடித்து விட்டது’ என்று கூறி சுப்பிரமணியின் கண்டுபிடிப்புக்கு ஆதரவாக பேசவில்லை. மயில்சாமி அண்ணாதுரையும் இஸ்ரோ தலைவர் சிவனும் இது குறித்து எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.