இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே கொண்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

 

இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே கொண்ட புதிய சாம்சங் ஸ்மார்ட்போன் வெளியீட்டு விவரம்

ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

டெல்லி: ஹூவாய் நிறுவனத்தைத் தொடர்ந்து சாம்சங் நிறுவனமும் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே கொண்ட தனது புதிய ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் செல்பி கேமராவுக்காக அதன் டிஸ்பிளேவில் ஹோல் வசதி இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது. அத்தகைய அம்சம் கொண்ட டிஸ்பிளே மாடல் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே என்று அழைக்கப்படுகிறது. தற்போது அதே டிஸ்பிளே வடிவமைப்பில் ஹுவாய் நிறுவனம் தனது நோவா 4 ஸ்மார்ட்போனை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது.

அதாவது, வருகிற டிச.17-ஆம் தேதி சீனாவில் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படுகிறது. நோவா 4 ஸ்மார்ட்போனின் புகைப்படத்தை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், ஹுவாய் நிறுவனத்தை முந்திக் கொண்டு சாம்சங் நிறுவனம் இன்ஃபினிட்டி ஓ டிஸ்பிளே மாடல் கொண்ட கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் டிசம்பர் 10-ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. நோவா 4 மாடலை விட சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே தலைசிறந்ததாக இருக்கும் என கூறப்படுகிறது.

சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் எதிர்பார்க்கப்படும் சிறப்பம்சங்கள்:

– 6.3 இன்ச் ஃபுல் ஹெச்.டி வளைந்த கிளாஸ் டிஸ்பிளே

ஸ்னாப்டிராகன் 710  பிராசஸர்

– 6 ஜி.பி. ரேம்

– 128 ஜி.பி. மெமரி

மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி

ஆண்ட்ராய்டு 8.0 ஓரியோ இயங்குதளம்

டூயல் சிம் ஸ்லாட்

– 24 எம்.பி பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்

– 10 எம்.பி. 120° அல்ட்ரா வைடு பிரைமரி லென்ஸ்

– 5 எம்.பி. டெப்த் கேமரா, f/2.2

– 24 எம்.பி. செல்ஃபி கேமரா, f/2.0

விரல்ரேகை சென்சார்

– 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத்

-யு.எஸ்.பி. டைப்-சி, என்.எஃப்.சி

– 3400 எம்.ஏ.ஹெச் பேட்டரி

அடாப்டிவ் ஃபாஸ்ட் சார்ஜிங்

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் சிறப்பம்சங்கள் குறித்து இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும் என்று கருதப்படுகிறது.