இனி door delivery யா “பிஸ்சா” மட்டுமில்ல “மண்”ணும் வரப்போகுது-ஆந்திரா அரசின் அதிரடி

 

இனி door delivery யா “பிஸ்சா” மட்டுமில்ல “மண்”ணும் வரப்போகுது-ஆந்திரா அரசின் அதிரடி

ஆந்திராவில் மணல் சப்ளை பற்றாக்குறை தொடர்பாக இருக்கும்  சர்ச்சையைத் தொடர்ந்து, நுகர்வோருக்கு வீடு வீடாக மணல் விநியோகம் செய்வதாக மாநில அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இந்த நடவடிக்கை ஜனவரி 2 முதல் கிருஷ்ணா மாவட்டத்தில் அறிமுகம்  செய்யப்பட்டு, ஜனவரி 20 ஆம் தேதிக்குள் மாநிலத்தின் 13 மாவட்டங்களுக்கும் மெதுவாக விரிவுபடுத்தப்படும். மணல் door delivery  க்கு  ஆந்திர மாநில கனிம மேம்பாட்டுக் கழகம் (ஏபிஎம்டிசி) பொறுப்பாகும்.

reddy

ஊடகங்களுடன் பேசிய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் பெடிரெட்டி ராமச்சந்திர ரெட்டி, மாநிலத்தில் தினசரி மணல் நுகர்வு சுமார் 80,000 டன் என்றும், இதுவரை 9,63,000 டன் மணல் சேமித்து வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த நான்கு மாதங்களுக்குள் , ஏபிஎம்டிசி ஒவ்வொரு மாதமும் சுமார் 15 லட்சம் டன் மணலை சேமிக்கும் என்று அமைச்சர் கூறினார். வரவிருக்கும் மழைக்காலத்திலும் சுமார் 60,000 லட்சம் டன் மணலும் சேமிக்கப்படும்.

sand

மாநிலத்தில் முன்னர் திட்டமிடப்பட்ட மொத்த 444 செக் போஸ்ட்களில், மூன்று முதல் நான்கு மாவட்டங்களில் சுமார் 55 செக் போஸ்ட்கள் தேவையற்றவை என்று ராமச்சந்திர ரெட்டி அறிவித்தார். மீதமுள்ள 381 சோதனைச் சாவடிகளின் கட்டுமானப் பணிகள் முடிந்துவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார். மணல் விநியோக வாகனங்களை கண்காணிக்க ஏபிடிஎம்சி மூலம்  கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும், முதலமைச்சர்  அலுவலகம், கட்டுப்பாட்டு அறையை  ரிமோட் மூலம் இயக்க வசதி   கொண்டுள்ளது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் வெளிப்படையான மணல் விநியோகத்தில் ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு செயல்பட்டு வருவதாகக் கூறி, புதிய மணல் கொள்கையால்  சுற்றுச்சூழலுக்கு  எவ்வாறு பாதிப்பில்லை என்பதைக் காட்ட தேசிய பசுமை தீர்ப்பாயம் (என்ஜிடி) அழைக்கப்படும் என்று கூறினார். முன்னதாக, TDP  காலப்பகுதியில், சுரங்கத்தைத் தடுப்பதில் மாநிலத்தின் ‘செயலற்ற தன்மைக்கு என்ஜிடி ரூ .100 கோடி இடைக்கால அபராதம் விதித்தது. இதை பின்னர் உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்தது 

tdp

ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசாங்கம் மே மாதம் ஆட்சிக்கு வந்த பிறகு, புதிய மணல் கொள்கை வகுக்கும் வரை மணல் வழங்கல் மூன்று மாதங்களுக்கு நிறுத்தப்பட்டது. செப்டம்பர் முதல் இது செயல்படுத்தப்பட்ட பின்னரும், மணல் பற்றாக்குறை காரணமாக மாநிலத்தில் கட்டுமான நடவடிக்கைகள் தேக்க நிலையில் இருந்தன.

sand

பல மாதங்களாக வேலையின்மைக்கு தள்ளப்பட்டதால்,அது  மாநிலம் முழுவதும் பல கட்டுமானத் தொழிலாளர்களின்  உயிரைப் பறித்தது . பல மாதங்கள் வேலையின்மையால்  அவர்களின்  நிதி நிலைமை மோசமானதன்  காரணமாக 11 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள் . தற்கொலைக்கு ஆளான குடும்பங்களுக்கும், தொழிலாளர்களுக்கு  இழப்பீடு வழங்கக் கோரியும் ,மணல் தட்டுப்பாட்டை நீக்க கோரியும்  எதிர்க்கட்சிகள்  பல போராட்டங்கள் நடத்தின .