இனி  ஹெல்மெட், லைசென்ஸ் எதுவுமே வேண்டாம்..! களமிறங்கும் இ-பைக்!

இனி  ஹெல்மெட், லைசென்ஸ் எதுவுமே வேண்டாம்..! களமிறங்கும் இ-பைக்!

சுற்றுசூழல் மாசடைவதை தடுக்கும் நோக்குடனும், பெட்ரோல், டீசல் விலையுயர்வை கருத்தில் கொண்டும் வாகன ஓட்டிகள், மின்சார வாகனங்களுக்கு மாறி வருகிறார்கள். வாக ஓட்டிகளின் இந்த நடவடிக்கையை ஊக்கப்படுத்தும் விதமாக, சமீபத்தில் சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனங்களுக்கு சார்ஜ் செய்யும் வசதி ஏற்படுத்தி தரப்படும் என்று அறிவித்து அதற்கான நடவடிக்கைகளிலும் மெட்ரோ நிர்வாகம் இறங்கியுள்ளது.

e bike

இந்நிலையில், குஜராத் மாநிலம், அஹமதாபாத் நகரத்தை மையமாகக் கொண்டு இயங்கும் மின் வாகன தயாரிப்பு நிறுவனமான கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம், அதன் புத்தம் புதிய மின்சார வாகனங்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த இ-பைக்கில் பயணிப்பதற்கு கூடுதல் விஷயங்களாக, இதை ஓட்டிச் செல்பவர்கள்  ஹெல்மெட் அணியத் தேவையில்லை. லைசென்ஸ் வைத்திருக்க வேண்டிய அவசியமும் கிடையாது. இந்த இ-பைக்கிற்கு பதிவெண்கள் எல்லாம் எதுவும் கிடையாது. சாதாரண  சைக்கிளை ஓட்டிச் செல்வது போலவே இதை ஓட்டிச் செல்லலாம். 
இந்த இ-பைக்குகள் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்டிருக்கின்றன.  முதல் மாடலான மண்டிஸ் இ-பைக்கை தற்போது அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. அராய் அமைப்பு இதற்கான ஒப்புதலை 2018ம் ஆண்டு வழங்கியதையடுத்து விற்பனையில் இறங்கியிருக்கிறது கிரீன்வோல்ட் மொபிலிட்டி நிறுவனம். மொபட் மற்றும் பிரீமியம் மிதிவண்டி ரகத்தில் காட்சியளிக்கும் இந்த வண்டி அனைவரையும் கவரும் வகையில் இருக்கின்றது. இந்த இ-பைக்கை ஓட்டிச் செல்ல ஹெல்மெட், பதிவெண், ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டியதில்லை என்பதால், செல்லமாக இதை ‘நோ செல்லாண்’ என்றழைக்கின்றனர்.  ஆகையால், இதனை வாங்கும் உரிமையாளர்கள் சாலையில் போலீஸார் மடக்குவார்கள் என அஞ்ச தேவையில்லை.