இனி ஸ்மார்ட்போனில் கீபோர்டு இருக்கு… ஆனா இல்லை! சாம்சங் நிறுவனத்தின் மாறுபட்ட முயற்சி!

 

இனி ஸ்மார்ட்போனில் கீபோர்டு இருக்கு… ஆனா இல்லை! சாம்சங் நிறுவனத்தின் மாறுபட்ட முயற்சி!

ஸ்மார்போன்கள் உலகில் புதிய கீபோர்டு ஒன்றை கொண்டுவர சாம்சங் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது

ஸ்மார்போன்கள் உலகில் புதிய கீபோர்டு ஒன்றை கொண்டுவர சாம்சங் நிறுவனம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்மார்ட்போன் வரவிற்கு பிறகு பல வேலைகள் பலருக்கு எளிதாகிவிட்டது என கூறினால் அது மறுக்க முடியாத ஒன்றே. உலகையே கைக்குள் அடக்கி விடும் அளவிற்கு தொழில்நுட்ப வசதிகள் வளர்ந்துவிட்டன.

samsung

இருப்பினும், தற்போது இருப்பவற்றை மென்மேலும் வசதிபூர்வமாக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் பல முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப வளர்ச்சிகள் அபரிவிதமாக வளர்ந்து வருகிறது. கண்டுபிடிப்புகளும் அதிகரித்து வருகின்றன.

அந்த வகையில், சாம்சங் நிறுவனம் மற்றுமொரு புதிய வசதியை ஸ்மார்ட்போன் உலகில் கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அப்படி ஒன்று தான் செல்ஃபீ  முறை கீபோர்டுகள்.

samsung

ஆம், அனைத்திலும் எளிய முறை வந்துவிட்டாலும், குறுங்செய்திகள் மற்றும் ஈ-மெயில்களை அனுப்ப நீண்ட நேரம் டைப் செய்தாக வேண்டியுள்ளது. இதனை குறைக்க செல்பி கேமிராக்கள் மூலம் செயற்கை நுண்ணறிவு முறையை பயன்படுத்தி கை விரல்கள் அசைவின் மூலம் டைப் செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

சாம்சங் நிறுவனத்தின் ஸ்கேங்வொர்க்ஸ் பிரிவு இதற்க்கான அனைத்து வடிவமைப்பு மற்றும் செயல்முறைகளை வடிவமைத்து வருகிறது. வரும் காலங்களில் அனைத்து ஸ்மார்ட்போன்களில் இதனை இணைக்கவும் முடிவு எடுக்கப்பட்டு வருவதாகவும் சாம்சங் நிறுவனத்தின் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

சாம்சங் எஸ்10+ ரக ஸ்மார்ட்போன்களில் சில அப்டேட்களுக்கு பிறகு கொண்டுவரப்படும் என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.