இனி விமான நிலையத்துல சிதம்பரத்தோட படம் மாட்டிருக்கும்- ஹெச். ராஜா கிண்டல்!

இனி விமான நிலையத்துல சிதம்பரத்தோட படம் மாட்டிருக்கும்- ஹெச். ராஜா கிண்டல்!

ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு ரூ305 கோடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி தந்ததில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் வழக்கில் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தேடப்படும் நபர் என சிபிஐ, அமலாக்கப்பிரிவு நோட்டீஸ் வெளியிட்டது. 

முன்னதாக ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம், நேற்று மறுப்பு தெரிவித்துவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார் ப. சிதம்பரம். அந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் உச்ச நீதிமன்றமும், அவருக்கு முன் ஜாமீன் கொடுக்க மறுத்துவிட்டது. தொடர்ந்து முன் ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்துளார். அவருடைய மனு எப்போது விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என தெரியவில்லை. 

இதனிடையே, தேடப்படும் நபராக ப.சிதம்பரத்தை அமலாக்கத்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற முடியாத நிலை உருவாகி உள்ளது. 
 
இந்நிலையில் ஹெச். ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “ அப்படினா இந்த பஸ் ஸ்டாண்ட் ரயில்வே ஸ்டேஷன் போல ஏர் போர்ட்ல படம் மாட்டி வைப்பார்களா. “ED issues a lookout notice for P Chidambaram” என குறிப்பிட்டுள்ளார். 

சிதம்பரத்துக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஹெச். ராஜா இவ்வாறு நக்கலடித்துள்ளார்.