இனி வாகனங்களுக்கு 2  ஆண்டுக்கு ஒருமுறை எப்.சி! 

 

இனி வாகனங்களுக்கு 2  ஆண்டுக்கு ஒருமுறை எப்.சி! 

இனி புதிதாக வரும் பொதுப் போக்குவரத்து வாகனங்களுக்கு 2 ஆண்டுக்கு ஒருமுறை எப்.சி. (தரச் சான்று, FC) என போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதை அடுத்து இனி பழைய வாகனங்களுக்கு 2ஆண்டுக்கு ஒரு முறை எப்சி வாங்கினால் போதும் என தமிழக அரசின் போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. 

புதிய வாகன சட்டம்

புதிய மோட்டர் வாகன சட்டம் கடந்த டிசம்பர் மாதம் அமல்படுத்தப்பட்டது. அதன்படி 8 ஆண்டுகளுக்குள் இருக்கும் வாகனங்கள் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்சி வாங்க வேண்டும். அதற்கு மேல் உள்ள வாகனங்கள் இரண்டு ஆண்டுக்கு ஒருமுறை எப்சி வாங்க வேண்டும் என புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.  டிரைவிங் லைசென்ஸ், இன்சூரன்ஸ், ஆர்சி, எப்சி, பர்மிட் போன்றவற்றை டிஜிட்டலாக கொண்டு செல்லலாம் என்றும் புதிய விதியில் குறிப்பிட்டுள்ளது.