இனி ரயில்களிலும் ஒன்டே பாஸ்; எத்தனை முறை வேணும்னாலும் போகலாம்…குஷியில் பயணிகள்!

 

இனி ரயில்களிலும் ஒன்டே பாஸ்; எத்தனை முறை வேணும்னாலும் போகலாம்…குஷியில் பயணிகள்!

தினமும் ரயிலில் அதிகப்படியாகப் பயணம் மேற்கொள்வோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். 

சென்னை மின்சார ரயில்களில் தினந்தோறும் லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து வருகிறார்கள். அவர்களின் பயணத்தை எளிய முறையில் மாற்ற தெற்கு ரெயில்வே சென்னை கோட்டம் சார்பில்  பாஸ்களை அறிமுகம் செய்துள்ளது. 

ttn

அதாவது ஒரு நாள், 3 நாள், 5 நாட்களுக்கான ‘பாஸ்’ வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஒரு நாள் முழுவதும் பயணம் செய்ய  2 ஆம் வகுப்பு ரயில் பாஸ்  70 ரூபாயும்,  முதல் வகுப்பு ‘பாஸ்’ ரூ.295-க்கு வழங்கப்படுகிறது. கூட்டநெரிசலைத் தடுக்கும் வகையில் இந்த முறை  நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எத்தனை முறை வேண்டுமானாலும் நாம்  ரயிலில் பயணம் செய்யலாம். தினமும் ரயிலில் அதிகப்படியாகப் பயணம் மேற்கொள்வோருக்கு இந்த திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என பயணிகள் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.