இனி யார் வம்பு தும்புக்கும் போக மாட்டேன்… மக்களுக்கு சேவை செய்வேன் – பிரசாந்த் கிஷோர்

 

இனி யார் வம்பு தும்புக்கும் போக மாட்டேன்… மக்களுக்கு சேவை செய்வேன் – பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர். தொட‌ர்ந்து 2014 ஆம் ஆண்‌டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி பிரதமராகுவதற்காக அதிரடியாக பல வியூகங்களை வகுத்ததால், நாடு முழுவதும் அறியப்பட்டார்

பல்வேறு அரசியல் தலைவர்களின் அரசியல் வாழ்வை புரட்டிப்போட்ட, தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், பீகார் வளர்ச்சிக்காக பாடுபடப்போவதாக தெரிவித்துள்ளார்.

பிரசாந்த் கிஷோர். பீகாரைச் சேர்ந்த இந்த இளைஞர்தான் 2012 ஆம் ஆண்டு, குஜராத்தில் நரேந்திர மோடி மீண்டும் முதல்வர் பதவியை கைப்பற்றுவதற்கு மிகப்பெரிய வியூகங்களை வகுத்து தந்தவர். தொட‌ர்ந்து 2014 ஆம் ஆண்‌டு மக்களவைத் தேர்தலின்போது, மோடி பிரதமராகுவதற்காக அதிரடியாக பல வியூகங்களை வகுத்ததால், நாடு முழுவதும் அறியப்பட்டார். 2018 ஆம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்தில் இணைந்தார் பிரசாந்த் கிஷோர். குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு பல எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் ஆதரவு தெரவித்தது. இதற்கு பிரசாந்த் கிஷோர் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்சியிலிருந்து நீக்கப்பட்டார்.

modi-gujarat

இந்நிலையில் பாட்னாவில் செய்தியாளர்களிடம் பேசிய பிரசாந்த் கிஷோர், நிதீஷ்குமாரின் அரசியல் நடவடிக்கைகள் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினார்.

காந்தியின் கொள்கைகளை கைவிட முடியாது என கூறும் நிதிஷ் குமார் கோட்சேவுக்கு ஆதரவு அளிப்போருடன் கைகோர்ப்பது எப்படி என்றார். நிதிஷ் குமார் பாஜகவுடன் இருப்பதில் எவ்வித தவறும் இல்லை என்ற பிரசாந்த் கிஷோர், அதேநேரத்தில் காந்தியுடன், கோட்சேவுடனும் அவர் இருக்க முடியாது என்றார்.ஓர் அரசியல் கட்சியின் தலைவராக இருக்கும் நிதீஷ்குமார் எந்தபக்கம் இருக்கிறார் என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் எனவும் பிரசாந்த் கிஷோர் கூறினார்.

prasant-kishor-09

பாஜகவுக்கு நிதீஷ்குமார் ஆதரவளிப்பதை குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், தேவையற்ற சுமையை தங்கள் தலைவர் சுமப்பதை பீ‌கார் மக்கள் ஏற்று கொள்ளமாட்டார்கள் என்றார்.2005 ஆம் ஆண்டு முதல் பீகார் ஏழை மாநிலமாகவே இருப்பதாக குறிப்பிட்ட பிரசாந்த் கிஷோர், பீகாரின் வளர்ச்சி குறித்து நிதீஷ்குமார் தன்னிடம்  விவாதிக்க தயாரா எனவும் சவால் விடுத்தார்.அடுத்த 100 நாட்களில் 10 லட்சம் ‌இளைஞர்களை தனது இயக்கத்தில் சேர்க்க இருப்பதாக தெரிவித்த பிரசாந்த் கிஷோர் பீகாரின் அரசியல் சூழ்நிலையை மாற்றவிருப்பதாகவும், புதிய கட்சி தொடங்கும் எண்ணம் ஏதும் இல்லை என்றும் கூறினார்.