இனி முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆதார் கட்டாயம்! ஆதார் இல்லாதவர்கள் இதை செய்யலாம்?

 

இனி முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கும் ஆதார் கட்டாயம்! ஆதார் இல்லாதவர்கள் இதை  செய்யலாம்?

மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடையத் தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும்

முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. 

60 வயதான மூத்த குடிகளுக்கு ‘பிரதான் மந்திரி வய வந்தன யோஜனா’ என்ற ஓய்வூதிய திட்டம், கடந்த 2017-2018 மற்றும் 2018-2019 மத்திய நிதிநிலைகளில் அறிவிக்கப்பட்டது.  எல்.ஐ.சி. மூலம் செயல்படுத்தப்படும்  இந்த திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 8 சதவீத உத்தரவாத தொகை  வழங்கப்படுகிறது. 

ttn

இந்நிலையில் இந்த முதியோர் ஓய்வூதிய திட்டத்திற்கு ஆதார் கட்டாயம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.  இது தொடர்பாக மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ மூத்த குடிமக்கள் ஓய்வூதிய திட்டத்தில் பலனடையத் தகுதி உடையவர்கள், ஆதார் வைத்திருப்பதற்கான ஆதாரம் சமர்ப்பிக்க வேண்டும் அல்லது ஆதாருக்கு விண்ணப்பிக்க வேண்டும். அதேசமயம் ஆதார் இல்லாதவர்கள்  இந்த திட்டத்தில் சேருவதற்கு முன் ஆதார் சேர்க்கைக்கு பதிவு செய்தல் வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

ttn

மேலும் தெளிவற்ற ‘பயோ மெட்ரிக்’ விவரங்களால், ஆதார் அடையாளத்தை  உறுதி செய்யமுடியாவிட்டால் அவர்களுக்கு மத்திய நிதியமைச்சகம்  உதவும் என்றும் ஆதாரை  உறுதிசெய்ய மொபைலுக்கு வரப்படும் ஓ.டி.பி. பெற சாத்தியம் இல்லாவிட்டால், ஆதார் கடிதம் மூலம் பலன்கள் அளிக்கப்படும். மேலும் ஆதார் கடிதத்தில்  உள்ள  கியூ.ஆர். கோட் மூலம் நம்பகத்தன்மை சரிபார்க்கப்படும்’ என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.