இனி மருத்துவர்களை தாக்கினால் 10 வருஷம் ஜெயில்! சுகாதார அமைச்சகம் அதிரடி!

தமிழகத்திலும், நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் அவ்வப்போது மருத்துவர்களின் மீது தாக்குதல் நடைப்பெற்று வருகிறது. சமீப காலங்களாக இந்த தாக்குதல்கள் அதிகளவில் நடந்து வருகிறது. மருத்துவர்கள் மீதும், செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் மீதும் நோயாளிகளின் உறவினர்களும், நண்பர்களும் பல்வேறு காரணங்களுக்காக தாக்குதல் நிகழ்த்துவதைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்திலும் ஈடுபட்டனர். 

doctors protest

இதனைத் தொடந்து, மத்திய சுகாதார அமைச்சகம் வன்முறை மற்றும் சேதத்தை தடுக்கும் வகையில் வரைவு மசோதா ஒன்றை உருவாக்கும் பணியை 8 பேர் கொண்ட ஒரு துணை குழுவிடம்  ஒப்படைத்தது.  வருகிற நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த குழு உருவாக்கி உள்ள அறிக்கை,  தாக்கல் செய்ய உள்ளதாக தெரிய வருகிறது. அந்த குழு உருவாக்கியுள்ள அறிக்கையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களை தாக்கினால் இனி 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கக் கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.