இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு

இனி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலிலும் லட்டு

வரும் தீபாவளி பண்டிகை  முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவசமாக லட்டு வழங்கப்படும் என கோவில் தக்கார் கருமுத்து அறிவித்துள்ளார்

வரும் தீபாவளி பண்டிகை  முதல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக இலவசமாக லட்டு வழங்கப்படும் என கோவில் தக்கார் கருமுத்து அறிவித்துள்ளார்

உலக புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தவறாமல் லட்டை வாங்கி செல்வது வழக்கம். இந்நிலையில் மதுரையில் புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலிலும் லட்டு பிரசாதமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Laddu

இதுகுறித்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் தக்கார் கருமுத்து கண்ணன் கூறுகையில், ”மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பக்கதர்களுக்கு பிரசாதமாக லட்டு வழங்கப்படும். இதற்காக கோவில் நிர்வாகம் பக்தர்களிடம் எந்தவொரு தொகையையும் வசூலிக்காது. வரும் தீபாவளி அதாவது அக்டோபர் 27 ஆம் தேதி முதல் இந்த திட்டம் அமல்படுத்தப்படும். பிரசாதமாக வழங்கப்படவுள்ள இந்த லட்டுக்கள் முழுக்க முழுக்க இயந்திரத்தால் தயாரிக்கப்பட திட்டமிடப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.