’இனி போண்டா, சமோசாவுக்கு எங்க போவீங்க பாஸு?’…டி.வி. விவாதங்களில் பங்கேற்க பாஜகவினருக்கு 144…

 

’இனி போண்டா, சமோசாவுக்கு எங்க போவீங்க பாஸு?’…டி.வி. விவாதங்களில் பங்கேற்க பாஜகவினருக்கு 144…

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோதும் அதிமுக சார்பில் ஊடகத்தில் கருத்து சொல்ல அக்கட்சி தலைமை தடை விதித்தது.

தொலைக்காட்சி விவாதங்கள் என்றாலே அலர்ஜி என்று ஒதுங்கிக்கொண்டவர்களுக்கு ஒரு நற்செய்தி.பா.ஜ.க.வினர் இனி தலைமையிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும்வரை தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கமாட்டார்கள் என்று மாநில பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியைச் சந்தித்த பிறகு, தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஒரு மாத காலத்துக்கு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்க காங்கிரஸ் கட்சி தடை விதித்தது. இதேபோல அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் எழுந்தபோதும் அதிமுக சார்பில் ஊடகத்தில் கருத்து சொல்ல அக்கட்சி தலைமை தடை விதித்தது. சில தினங்களுக்கு முன்புதான் அந்த தடையை அதிமுக விலக்கிக்கொண்டது. தற்போது அந்த வரிசையில்  தமிழக பாஜகவும் சேர்ந்துள்ளது. தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கப்போவதில்லை என அக்கட்சி அறிவித்துள்ளது.

bjp

இது குறித்து மாநில  தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தொலைக்காட்சி அரசியல் விவாதங்கள், கட்சிகளின் நிலைப்பாடுகளையும் கருத்துகளையும் மக்களிடம் எடுத்துச்செல்வதற்கு மிகவும் பயன் அளிப்பதாக உள்ளது. ஆனால், சமீபகாலமாக விவாதங்களில் சமநிலையும் சமவாய்ப்பும் இல்லாததால் தற்போது பாஜக சார்பில் பிரதிநிதிகள் யாரும் விவாதங்களில் கலந்து கொள்ள மாட்டார்கள் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.” எனத் தெரிவித்துள்ளார்.

தமிழிசையின் இந்த அறிவிப்பை தேன் வந்து பாயுது காதினிலே என்கிற  ரேஞ்சுக்கு கொண்டாடிவரும் நெட்டிசன்கள் சில பாஜக டிவி விவாத புள்ளிகளின் பெயர்களை வெளியிட்டு ‘இனி போண்டா, சமோசாவுக்கு எங்க போவீங்க பாஸு? என்று கிண்டலடித்து வருகிறார்கள்.