இனி போகிமான் கோ விளையாட்டை தூங்கிக்கொண்டே விளையாடலாம்! 

 

இனி போகிமான் கோ விளையாட்டை தூங்கிக்கொண்டே விளையாடலாம்! 

தூக்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு விளையாட்டை போகிமான் கோ நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

தூக்கத்தை அடிப்படையாகக்கொண்ட ஒரு விளையாட்டை போகிமான் கோ நிறுவனம் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. 

yy

போகிமான் கோ என்பது ஒரு மொபைல் விளையாட்டு. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் மொபைல்களில் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம். கடந்த வருடம் ஜப்பானில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வீடியோ கேம், ஒரே மாதத்தில் அதிக வருவாய் ஈட்டிய கேம் என்ற சாதனையையும் பெற்றது. ஜிபிஎஸ் தொழில் நுட்பத்தின் மூலம் மாயை உருவங்களை தோற்றுவித்து அவற்றுடன் மல்லுக் கட்ட வைக்கும் இந்த விளையாட்டினால் உலகின் பல பகுதிகளிலும் விபத்துக்கள் ஏற்பட்டதாக பல குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதனால் பல நாடுகளில் இந்த விளையாட்டை தடை செய்தனர். இருப்பினும் போக்கிமோன் கோ- வின் அட்டகாசமும் ஆரவாரமும் இளைஞர்கள் மத்தியில் இன்னும் குறையவில்லை எனலாம். 

aa

இந்நிலையில் தூங்கிக்கொண்டே விளையாடும் ஒரு போகிமான் கோ விளையாட்டை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தவுள்ளது. நம்மில் பலர் கைபேசியிலோ கணினியிலோ போகிமானை விளையாடி இருப்போம். அவை அனைத்திலும் நாம் கண்விழித்துக்கொண்டு மட்டுமே விளையாடமுடியும். ஆனால் தூக்கத்தை அடிப்படையாகக்கொண்ட போகிமான் கோ ஸ்லீப் என்ற  விளையாட்டை அறிமுகப்படுத்த போகிமான் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதில் விளையாடுபவர்களின் தூக்க நிலை புதிய கருவி முலம் கண்காணிக்கப்பட்டு அந்த தகவல்கள் செல்போனுக்கு அனுப்பப்படுமாம். தூக்கத்தை ஒரு கேளிக்கையாக்குவதே தனது அடுத்த இலக்கு என்று சவால்  விடுத்துள்ளது போகிமான் கோ நிறுவனம்.