இனி பெண்களுக்கு எதிராக இணையத்தில் பதிவிட்டால்…நெட்டிசன்களை எச்சரித்த நடிகை சமந்தா

 

இனி பெண்களுக்கு எதிராக இணையத்தில் பதிவிட்டால்…நெட்டிசன்களை எச்சரித்த நடிகை சமந்தா

இதற்கு எதிராக பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர். தற்போது  குற்றவாளிகள் நால்வரும் போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ஹைதராபாத்தைச் சேர்ந்த கால்நடை மருத்துவரான பிரியங்கா ரெட்டியை கடந்த சில நாட்களுக்கு முன்பு மதுபோதையிலிருந்த  சென்னகேசவலு, நவீன் உள்ளிட்ட நால்வர் திட்டமிட்டு கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்து கொன்றதுடன்  பெட்ரோல் ஊற்றி எரித்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இந்த  கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட முகமது பாஷா, நவீன், சின்ன கேசவலு மற்றும் ஷிவா  ஆகிய நால்வரும் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் இதற்கு எதிராக பலரும் தங்கள் கண்டன குரல்களை பதிவு செய்து வந்தனர். தற்போது  குற்றவாளிகள் நால்வரும் போலீசாரால்  என்கவுண்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 

ttn

இதுகுறித்து தெலுங்கு இயக்குநர்  டேனியல் ஷிரவன் தனது பேஸ்புக் பக்கத்தில், ‘பாலியல் பலாத்காரங்கள் ஆண்களின் மற்றும் பெண்களின் திருப்தியற்ற பாலியல் ஆசைகளால் மட்டுமே நடக்கின்றன. அதனால் பெண்கள்  தங்களை கற்பழிக்கவரும் ஆண்களுக்கு  ஒத்துழைப்பு அளிக்கவேண்டும். அப்படி செய்துவிட்டால் அவர்கள் ஏன்  உங்களை  கொலைசெய்யப்போகிறார்கள்’ என்று மிகவும் குரூரமாக பதிவிட்டிருந்தார். 

ttn

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில்  சைபர் புல்லிங்கை எனப்படும் பெண்களை இணையத்தில் கொடுமைப்படுத்துவது தொடர்பாக காவல் துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  நடிகைகளுக்கு எதிராகவும் பெண்களுக்கு எதிராகவும் பதிவிடும் நெட்டிசன்களுக்கு எதிராக வழக்குத் தொடரப்படும் என்றும் குற்றவாளிகள் உடனே கைது செய்யப்படுவார்கள் என்று அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த செய்தியை தனது இணையதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நடிகை சமந்தா நடிகைகள்  மட்டுமில்லாது ஒட்டுமொத்த பெண்களையும் சைபர் புல்லிங் செய்தால் உங்கள் மீது நடவடிக்கை பாயும் என்று சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.