இனி பள்ளிக்கு போனா பால் குடிக்கலாம்..!

 

இனி பள்ளிக்கு போனா பால் குடிக்கலாம்..!

தமிழகத்தில் உள்ளா 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ளா 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ, மாணவிகளுக்கு சத்துணவுடன் பால் வழங்குவது குறித்து ஆலோசித்து வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் காமராஜர் ஆட்சிக்காலத்திலிருந்தபோதிலிருந்து மதிய உணவு திட்டம் கொண்டுவரப்பட்டது. காலப்போக்கில் மதிய உணவு திட்டம் சத்துணவு திட்டமாக மாறியது. வீட்டில் உணவில்லாமல் இருக்கும் குழந்தைகள் பள்ளிகளில் ஊட்டச்சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும் என்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. இந்நிலையில் இந்த திட்டத்தின் கீழ் தற்போது 13 வகையான உணவுகள் வழங்கப்படுகிறது. மேலும் உணவுடன் சேர்த்து முட்டையும் வழங்கப்படுகிறது.

இந்நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு தினமும் காலையில் ஒரு கப் பால் வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. குழந்தைகளின் எலும்புக்கு வளர்ச்சியை தருவதுடன் புரத சத்துகளை அளிக்கும் பாலை பள்ளிக்குழந்தைக்கு வழங்குவதில் நிறைய சிரமங்களும் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். ஏனெனில் பாலை மிக நீண்ட நேரம் கெடாமல் பாதுகாப்பது மிகவும் சிரமமான விஷயமாகும்.