இனி நீங்களே கண்டுபிடியுங்கள்… திருடுபோன போனை கண்டுபிடிக்கும் வழியை அறிமுகம் செய்த மத்திய அரசு!

இனி நீங்களே கண்டுபிடியுங்கள்… திருடுபோன போனை கண்டுபிடிக்கும் வழியை அறிமுகம் செய்த மத்திய அரசு!

திருடுபோன ஸ்மார்ட் போன்களை கண்டறியும் டிராக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, போலீசில் புகார் செய்துவிட்டு சென்ட்ரல் எக்யூப்மெண்ட் ஐடென்டிட்டி ரிஜிட்டர் என்ற தளத்தில் பதிவு செய்து நம்முடைய மொபைல் எங்கே உள்ளது என்று நாமே டிராக் செய்யலாம்.

திருடுபோன ஸ்மார்ட் போன்களை கண்டறியும் டிராக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது.
வருடா வரும் அறிமுகம் ஆகும் ஸ்மார்ட் போன்களை வாங்கி பயன்படுத்துவது பலருக்கும் ஃபேஷனாகிவிட்டது. ஸ்மார்ட் போன்களைத் திருடுவதும் அதிகரித்துவிட்டது. இந்த ஸ்மார்ட் போன் திருட்டு பற்றி போலீசில் புகார் கொடுத்தால் கண்டுபிடித்துக் கொடுப்பது என்பது மிக மிகக் குறைவுதான். புகார் கொடுத்ததோடு ஸ்மார்ட் போனை மறந்துவிட வேண்டும் என்ற நிலைதான் தற்போது உள்ளது.
திருடுபோன ஸ்மார்ட் போன்களை கண்டறியும் டிராக்கர் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, போலீசில் புகார் செய்துவிட்டு சென்ட்ரல் எக்யூப்மெண்ட் ஐடென்டிட்டி ரிஜிட்டர் என்ற தளத்தில் பதிவு செய்து நம்முடைய மொபைல் எங்கே உள்ளது என்று நாமே டிராக் செய்யலாம். 
இந்த வசதி முதல் கட்டமாக டெல்லி மற்றும் மகாராஷ்டிராவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த வசதியின் மூலம், https://ceir.gov.in/Home/index.jsp என்ற இணைய தளத்துக்குச் சென்று போலீஸ் புகார், மொபைல் ஐ.எம்.இ.ஐ நம்பர், மொபைல் நம்பர் உள்ளிட்ட தகவலைப் பதிவேற்றம் செய்து உங்கள் மொபைல் எந்த இடத்தில் உள்ளது என்று கண்டறிய முடியும்.

mobile miss

மேலும், மொபைல் போனை யாரும் பயன்படுத்த முடியாதபடி அதை பிளாக் செய்யவும், மொபைல் கிடைத்த பிறகு அன்பிளாக் செய்யவும் முடியும். இதனால், திருடியவர் உங்கள் மொபைல் போனை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. விரைவில் இந்தியா முழுக்க இந்த திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்று மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.