இனி திருப்பதிக்கு இப்படி போனா மலையேற விட மாட்டாங்க! | தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை!

 

இனி திருப்பதிக்கு இப்படி போனா மலையேற விட மாட்டாங்க! | தேவஸ்தானம் அதிரடி நடவடிக்கை!

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசத்தி பெற்ற கோவிலாகும். நாடு முழுவதுமிருந்து பல கோடி கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் வாரஇறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும்.

thirupathi

திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக பிரசத்தி பெற்ற கோவிலாகும். நாடு முழுவதுமிருந்து பல கோடி கணக்கான பக்தர்கள் திருப்பதி கோவிலுக்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளனர். விடுமுறை நாட்கள் மற்றும் வாரஇறுதி நாட்களில் திருப்பதியில் பக்தர்களின் வருகை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். திருமலை ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்கள், பெரும்பாலும் சொந்த வாகனங்களிலோ அல்லது வாடகை வாகனங்கள் வாயிலாக வருகின்றனர்.

mountain

இந்நிலையில், மலைபாதையில் செல்லும் பழைய வாகனங்களிலிருந்து, புகை அதிகமாக வெளியேறி சுற்றுச்சூழலையும் மாசுபடுத்துவதாக திருப்பதி தேவஸ்தானம் கருதியது. அதனால், நேற்று முன்தினத்தில் இருந்து, 2003ம் ஆண்டிற்கு முந்தைய ஆண்டு வரையிலான பதிவு செய்யப்பட்ட வாகனங்களை, திருமலைக்கு செல்ல தடை விதித்து, தேவஸ்தானம் திடீரென்று திருப்பி அனுப்பியது.
தேவஸ்தானத்தின் இந்த திடீர் நடவடிக்கையால், பழைய வாகனங்களில் வந்த பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையிட்டனர். அதை ஏற்று, அக்டோபர் முதல், 2003ம் ஆண்டிற்கு முன் தயாரிக்கப்பட்ட வாகனங்கள் திருமலைக்கு செல்ல, தேவஸ்தானம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து பக்தர்களுக்கு அறிவுறுத்தவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.