இனி திமுகவுக்கு சி.எம்., கே.என்.நேருதான்.., கொக்கரிக்கும் உ.பி.,கள்..!

 

இனி திமுகவுக்கு சி.எம்., கே.என்.நேருதான்.., கொக்கரிக்கும் உ.பி.,கள்..!

இனி, திருச்சிக்கு சி.எம் கே.என்.நேரு தான் என்று நெஞ்சம் நிமிர்த்துகிறார்கள் திமுகவினர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது திருப்புமுனை தந்த திருச்சியில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலின்போது வெறுப்புமுனை ஆகிவிட்டதால் வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தங்கள் பலத்தை நிரூபித்தாக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர் அதிமுகவினர். 

இந்த மாவட்டத்தில் மொத்தம் 24 மாவட்டங்களில் 19 ஒன்றியங்களில் திமுகவிடம் தாரை வார்த்தது அதிமுக. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களுக்கு கட்சியின் மீது அக்கறை இல்லை என்பது உண்மை. அதாவது யார் யாருக்கு சீட்டு கொடுப்பது என்பது முதல் வாய்ப்பு கிடைத்த அந்த நபரை ஜெயிக்க வைப்பது வரை தங்களால் முடிந்த அளவிற்கு அனைத்து உதவிகளையும் வழங்க வேண்டியது கட்சியிலுள்ள பொறுப்பாளர்களின் முக்கிய பணி.

stalin

ஆனால் தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் தமிழ்நாடு ஹோட்டலில் கூடிப்பேசி அவர்கள் எடுத்த அந்த ஒரு முடிவுதான் அதிமுகவின் இந்த முடிவுக்கு காரணம். அதாவது வார்டு உறுப்பினர் முதல் மாவட்ட கவுன்சில் வரை யார் யாருக்கு சீட் கொடுப்பது என்பதை அந்தந்த எம்எல்ஏக்களின் பொறுப்பிலேயே விட்டுவிட்டதால் அந்த ஒன்றிய செயலாளர்கள் தாங்களே தேர்தலில் நின்றதோடு மக்களின் மனநிலையை வேட்பாளர்களின் வெற்றி வாய்ப்பு என எதையுமே கண்டு கொள்ளாமல் தங்கள் முடிவிற்கு மட்டும் வாய்ப்பு கொடுத்து  நிறுத்தினர்.

இதுவே திமுகவின் வெற்றிக்கு மிகப் பெரிய வாய்ப்பாக அமைந்தது. முசிறி ஒன்றியத்தை பொதுத்துறை மொத்தம் உள்ள 18 ஆண்டுகளில் வெறும் ஐந்து நாட்களில் மட்டுமே அதிமுக வெற்றிபெற்றுள்ளது. அதற்கு காரணம் தனது மனைவியை வேட்பாளராக ஒன்றிய செயலாளர் ராஜமாணிக்கம் மற்ற வேட்பாளர்கள் யாருமே கண்டுகொள்ளவில்லை. இந்த வெறுப்பின் காரணமாகவே அவரும் தோற்று மற்றவர்களின் தோல்விக்கு காரணம் ஆகி விட்டார். திருச்சி உள்ளாட்சி தேர்தலில் அதிமுக தோற்றதற்கு மேற்கொண்ட உதாரணம் ஒரு பானை சோற்றுக்கு ஒரு பதம்.

nehru

அதிமுகவினர் இப்படி துவண்டு கிடக்கும் நேரத்தில் திருச்சியில் மொத்தம் உள்ள 65 வாதிகளுக்கும் வெற்றி வேட்பாளர் அதை எப்போது தேர்ந்தெடுத்து ஆரம்பகட்ட பணிகளை முடித்து விட்டோம். ஆகவே மேயர் துணை மேயர் மட்டுமல்ல. இங்குள்ள 4 கோட்ட தலைவர்களும் நாங்கதான் இனி, திருச்சிக்கு சி.எம் கே.என்.நேரு தான் என்று நெஞ்சம் நிமிர்த்துகிறார்கள் திமுகவினர்.