இனி டெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கலாம் – ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதி அறிமுகம்

 

இனி டெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கலாம் – ஐசிஐசிஐ வங்கியின் புதிய வசதி அறிமுகம்

டெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

டெல்லி: டெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வசதியை ஐசிஐசிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது.

டெபிட் கார்டுகள் மூலம் மோசடிகள் நடப்பது நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இது தொடர்பாக புகார்களும் வந்த வண்ணம் உள்ளன. இதை தவிர்க்கும் பொருட்டு டெபிட் கார்டு இல்லாமல் ஏ.டி.எம்களில் பணம் எடுக்கும் வசதியை வங்கிகள் அறிமுகப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், டெபிட் கார்டு உதவியில்லாமல் யோனோ ஆப் மூலம் பணம் எடுக்கும் வசதியை கடந்தாண்டு எஸ்.பி.ஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்தது.

icici

இந்நிலையில், தற்போது ஐசிஐசிஐ வங்கியும் அதேபோன்ற வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதாவது இந்த வங்கிக்கு சொந்தமான ஐ-மொபைல் ஆப் உதவியுடன் கோரிக்கை விடுத்து ஏ.டி.எம்களில் இருந்து பணத்தை எடுக்க முடியும். இந்த பரிவர்த்தனை முறையில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக ரூ.20 ஆயிரம் வரை பணம் எடுக்க முடியும். இந்த சேவையின் வாயிலாக நாட்டில் 15,000-க்கும் மேற்பட்ட ஏ.டி.எம்களில் இருந்து பணம் பெற இயலும் என்பது குறிப்பிடத்தக்கது.