இனி டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை!

 

இனி டிவிட்டரில் அரசியல் விளம்பரங்களுக்கு தடை!

தேர்தல் நேரங்களில் சமூக வலைதள விளம்பரங்களுக்கென பல கோடிகள்  செலவிடப்படுகின்றன.

அரசியல் விளம்பரங்களைத் தடை செய்ய உள்ளதாக டிவிட்டர் நிறுவனம்  அறிவித்துள்ளது. 

twitter

சமூகவலைதளங்களை பெரும்பாலும் அரசியல் கட்சிகள்  தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. குறிப்பாக தேர்தல் நேரங்களில் சமூக வலைதள விளம்பரங்களுக்கென பல கோடிகள்  செலவிடப்படுகின்றன. இதில் பெரும்பாலும் தவறான தகவல்கள் பதிவேற்றப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளன. 

 

இந்நிலையில் உலக அளவில் டிவிட்டரில் பதிவேற்றப்படும் அரசியல் விளம்பரங்களைத் தடை செய்ய உள்ளதாக அந்நிறுவன தலைமை நிர்வாகி ஜேக் டோர்சே தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பானது  அடுத்த மாதம்  முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.