இனி டாக்டாரை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை! – அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

 

இனி டாக்டாரை தாக்கினால் ஏழு ஆண்டு சிறை! – அவசர சட்டத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல்

இந்தியா முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் மூலம் கொரோனா தங்களுக்கும் பரவிவிடும் என்ற அச்சம் காரணமாக ஒருபுறம் தாக்குதல் நடக்கிறது. மற்றொரு புறம் கொரோனாவை கண்டறிய வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்களைத் தாக்கினால் ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையிலான அவசர சட்டத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார்.
இந்தியா முழுக்க கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. மருத்துவர்கள் மூலம் கொரோனா தங்களுக்கும் பரவிவிடும் என்ற அச்சம் காரணமாக ஒருபுறம் தாக்குதல் நடக்கிறது. மற்றொரு புறம் கொரோனாவை கண்டறிய வரும் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. இதனால் மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக செய்திகள் வெளியாகின.

health-workers-7

இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை அவசரமாக கூடி மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்தினால் அபராதம் மற்றும் ஏழு ஆண்டு சிறை தண்டனை வழங்கும் வகையில் புதிய சட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றியது. இதற்கு இன்று குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்தார். இதன் மூலம் இந்த அவசர சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. மருத்துவர்களைத் தாக்கினால் இனி சிறை மற்றும் ஏழு லட்சம் வரை அபராதம் செலுத்த வேண்டியதுதான்.