இனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி!  ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்!

இனி ஜியோ, ஏர்டெல், வோடபோன் காலி!  ஆஃபர்களை அள்ளி வீசும் செல்போன் நிறுவனம்!

ஜியோ அறிமுகமான புதிதில் இனி பிற செல்போன் நிறுவனங்கள் எல்லாமே காலி என்கிற பேச்சு பரவலாக எழுந்தது. வாடிக்கையாளர்களும் நூற்றுக்கணக்கில் ஆரம்பித்து, தினந்தோறும் ஆயிரக்கணக்கில் பிற நிறுவனங்களின் சேவைகளைப் புறக்கணித்து கொத்து கொத்தாக ஜியோவிற்கு மாறி கெத்து காட்டினார்கள். இந்நிலையில், சமீபத்தில் ஜியோ எண்களைத் தவிர்த்து மற்ற மொபைல் நெட்வொர்க் எண்களுக்குப் பேசினால், வாய்ஸ் கால்களுக்கு நிமிடத்துக்கு 6 பைசா கட்டணம் என ஜியோ நிறுவனம் அறிவித்தவும் இதுவரையில் பயன்படுத்தி வந்தவர்கள் அதிர்ச்சியடைந்தார்கள்.

jio vs airtel vodafone

எந்த நெட்வொர்க் எண்களுக்குப் பேசினாலும் வாய்ஸ்கால்கள் முற்றிலும் இலவசம் என ஏர்டெல், வோடஃபோன், ஐடியா ஆகிய தொலை தொடர்பு நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டெலிகாம் நிறுவனங்களின் இந்த அறிவிப்பால் அந்நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் செம கொண்டாட்டத்தில் உள்ளனர். இவர்களின் அறிவிப்பை எல்லாம் தூக்கி தூர எறியும் விதமாக தமிழ்நாடு பிஎஸ்என்எல் நிறுவனமும் ஆஃபர்களை அள்ளி வீசுவதற்கு களத்தில் இறங்கியுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு போட்டியாக வாடிக்கையாளர்களுக்கு புதிது புதிதாய் செம ஆபர்களை அறிவித்துள்ளது பிஎஸ்என்எல். அதன்படி ரூபாய் 1699-க்கு ரீசார்ஜ் செய்தால் 365 நாட்களுக்கு பதிலாக 455 நாட்கள் தினசரி பேசலாம். நாளொன்றுக்கு 3.5 GB டேட்டா, 250 நிமிடங்கள் டாக்டைம், தினசரி 100 எஸ்எம்எஸ்-கள் இலவசம் என அறிவித்துள்ளது வாடிக்கையாளர்களை சந்தோஷத்தின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றுள்ளது.

bsnl

இதுதவிர லேண்ட்லைன் வாடிக்கையாளர்களுக்கு பிராட்பேண்ட் கனெக்‌ஷன் ட்ரையல் ஆபர் ஒன்றையும் அறிவித்துள்ளது. ஒரு மாதம் வரை இந்த ட்ரையல் ஆபர் இருக்கும். தினசரி 5 GB வழங்கப்படும் என்றும் தீபாவளி ஆபர்களை பிஎஸ்என்எல் அள்ளி வழங்கி வருகிறது. வருடாந்திர பிளான்களை தேர்ந்து எடுப்பவர்களுக்கு 25% கேஷ்பேக் திட்டமும் உண்டு. இது எல்லாவற்றுக்கும் இந்த மாதம் 31ம் தேதி தான் கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.