இனி ஜவுளிக்கடை போன்ற இடங்களில் வேலைப் பார்க்கும் பெண்கள் அமர்ந்துகொள்ளலாம்! கேரள அரசு

இனி ஜவுளிக்கடை போன்ற இடங்களில் வேலைப் பார்க்கும் பெண்கள் அமர்ந்துகொள்ளலாம்! கேரள அரசு

ஜவுளிக்கடை போன்ற இடங்களில் நாள் முழுவதும் நின்று கொண்டே வேலை பார்க்கும் பெண்களுக்கு உட்கார இருக்கைகள் தரவேண்டும் என கேரள அரசு உத்தரவிட்டு இருக்கிறது. இதுகுறித்த விளம்பரம் ஒன்றை அம்மாநில அரசு வெளியிட்டுள்ளது. 

துணிக்கடையாக இருக்கட்டும், நகைக்கடையாக இருக்கட்டும் அங்கு பணிப்புரிபவர்கள் தொடர்ந்து 8 மணி நேரம் நின்றுக்கொண்டே வேலை செய்வதை பார்த்திருப்போம். வேலை இருக்கோ இல்லையோ, வாடிக்கையாளர்கள் இருக்கின்றனரவோ இல்லையோ அவர்கள் நின்று கொண்டே வேலை செய்ய வேண்டும் என்பதுதான் அவர்களுக்கு விதிக்கப்பட்ட நிபந்தனை. இதனை ஆண்கள் வேண்டுமானால் அட்ஜெஸ் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்கள் எல்லா காலங்களிலும் இப்படி 8 மணி நேரம் நின்று கொண்டிருக்கமுடியாது. 

advertisement

இதனை உணர்ந்த கேரள அரசு ஜவுளி, நகைக்கடை போன்ற கடைகளில் வேலைப் பார்க்கும் பெண்கள் வேலையில்லாமல் இருக்கும்போது நாற்காலியில் அமர்ந்து ஓய்வெடுக்கலாம் என்ற புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. இதனை தமிழகமும் அறிமுகப்படுத்தினால் அதுதான் பெண்களுக்கான நிஜமான விடுதலை.