இனி சென்னை-செங்கல்பட்டு பயண நேரம் 15 நிமிடம் ! வருகிறது பறக்கும் கால்டாக்சி !

 

இனி சென்னை-செங்கல்பட்டு பயண நேரம் 15 நிமிடம் ! வருகிறது பறக்கும் கால்டாக்சி !

ஒட்டு மொத்த சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது ஹுண்டாய் நிறுவனம். இந்த காரை பயணிகளுக்கு வாடகைக்கு விட உள்ளது உபேர் நிறுவனம்.
மக்கள் தொகையில் 130 கோடியை எட்டி விட்ட இந்தியாவில் இன்றும் வாகனங்களில் பயணம் செய்வது அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்களுக்கு நரகம் போல்தான். அதற்காகத்தான் அரசாங்கள் பேருந்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என புது புது வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டே போகிறது.

ஒட்டு மொத்த சாலை போக்குவரத்து நெரிசலை குறைக்க பறக்கும் காரை அறிமுகப்படுத்த உள்ளது ஹுண்டாய் நிறுவனம். இந்த காரை பயணிகளுக்கு வாடகைக்கு விட உள்ளது உபேர் நிறுவனம்.
மக்கள் தொகையில் 130 கோடியை எட்டி விட்ட இந்தியாவில் இன்றும் வாகனங்களில் பயணம் செய்வது அன்றாடம் வேலைக்கு செல்லும் மக்களுக்கு நரகம் போல்தான். அதற்காகத்தான் அரசாங்கள் பேருந்து நெரிசலை தவிர்க்க மெட்ரோ ரயில், விமானப் போக்குவரத்து, ரயில் போக்குவரத்து என புது புது வசதிகளை செய்து கொடுத்துக் கொண்டே போகிறது. ஆனால் மக்கள் தொகை நாளுக்கு நாள் அதிகரிக்க இந்த வசதிகளும் பற்றாக்குறை ஆகிவிட்டது.

Hyundai flying car 01

இந்த பிரச்சனையை தீர்க்கத்தான் புதிதாக தயாரிக்கப்பட்ட பறக்கும் கார் 2020ம் ஆண்டு சர்வதேச விழாவில் காட்சிக்கு வைக்கப்பட்டது. இதற்கு பெயர்  கான்செப்ட் எஸ்-ஏ1 . இதன் மூலம் வான்வழி, தரைவழி போக்குவரத்து ஏரியல் ரைடு ஷேர் நெட்வொர்க் மூலம் வழங்கப்பட உள்ளது. இந்த பறக்கும் கார் மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும். தொடர்ந்து 100 கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்யும். பேட்டரியால் இயங்கும் இந்த கார் தற்போது மனிதர்கள் மூலம் இயக்கப்பட்டாலும் எதிர்காலத்தில் தானாக இயங்க கூடிய வகையில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பின்ன என்ன கவலை இனி சென்னையில் இருந்து சேலத்திற்கு 8 வழிச்சாலை தேவை இல்லை. பறக்கும் காரிலேயே ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம்.