இனி சாலையில் மற்றவர் முகம் சுளிக்க அதை செய்யத் தேவையில்லை… வழிகாட்டுகிறது கூகுள்…

 

இனி சாலையில் மற்றவர் முகம் சுளிக்க அதை செய்யத் தேவையில்லை… வழிகாட்டுகிறது கூகுள்…

பொதுமக்களின் வசதிக்காக கூகுள் வரைபடத்தில் கழிப்பறை உள்ள 57,000 இடங்களை பட்டியலிடப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி அறிமுகப்படுத்திய தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு அங்கமாகவும், 150வது பிறந்த நாளை முன்னிட்டு மகாத்மா காந்தியின் அசையை நிறைவேற்றும் விதமாகவும் உள்ளதாக தூய்மை இந்தியா திட்டத்தின் மூத்த மேலாளர் அனல் கோஷ் தெரிவித்துள்ளார்.

 

அதாவது நாடு முழுவதும் 2,300 க்கும் மேற்பட்ட நகரங்களில் 57,000 க்கும் மேற்பட்ட பொது கழிப்பறைகள் உடங்கள் கூகுள் வரைபடத்தில் இடம்பெற்றுள்ளது. நெடுஞ்சாலைகளில் பயணம் செய்பவர்கள் கழிப்பறை எங்கு உள்ளது என நாள் ஒன்றுக்கு 2.5 லட்சம் பேர் கூகுள் வரைபடத்தில் தேடுவதாக ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

கூகுள் வரைபடத்தில் கழிப்பறைகள் இடம் பெறும் திட்டம் 2016ம் ஆண்டு தூய்மை இந்தியா மிற்றும் வீட்டு வசதி நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் உதவியுடன் தொடங்கப்பட்டது. முதலில் டெல்லி, போபால் மற்றும் இந்தூரில் தொடங்கப்பட்டது.

toilet

பொது சுகாதார வசதிகள் பற்றிய தகவல்களை மக்களுக்கு எளிதில் அணுகுவது சமூக நன்மைக்கான ஒரு முக்கிய அங்கமாகும் என்று நாங்கள் நம்புவதாகவும், இது தூய்மையான பழக்கவழக்கங்களையும் சுகாதாரத்தையும் மேம்படுத்துவதற்கான பிரச்சாரத்தின் மூலக்கல்லாகும் என்றும் அனல் கோஷ் தெரிவித்தார்.

 

கூகுள் வரைபடத்தில் கழிப்பறை பட்டியல்கள் இடம்பெறகூகிள் தளம் உதவி உள்ளது. இதனால் பொதுமக்கள் வருகைகள், மதிப்பீடுகள், மதிப்புரைகள் மற்றும் பலவற்றைக் கண்காணிக்க முடியும், இதன் மூலம், கழிப்பறைகளை பராமரிக்கவும் மேம்படுத்தவும் தேவையான நடவடிக்கை எடுக்க அவர்களுக்கு உதவக்கூடிய நுண்ணறிவுகளைப் பெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது