இனி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் யாரும் நுழைய முடியாது! அதிரடியாய் களத்தில் இறங்கிய அமித்ஷா!

 

இனி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் யாரும் நுழைய முடியாது! அதிரடியாய் களத்தில் இறங்கிய அமித்ஷா!

காஷ்மீர் விவகாரத்திற்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு குறித்து சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாக, 
நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தேசிய குடிமக்கள் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அசாம் மாநிலத்தில் இது முதலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர்.

காஷ்மீர் விவகாரத்திற்கு பிறகு நாட்டின் பாதுகாப்பு குறித்து சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது மத்திய அரசு. அதன் ஒரு பகுதியாக, 
நமது நாட்டில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. அந்த வகையில், தேசிய குடிமக்கள் பட்டியலை மத்திய அரசு தயாரித்து வருகிறது. அசாம் மாநிலத்தில் இது முதலில் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதில் பங்காளதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக அசாமில் குடியேறிய 19 லட்சம் பேர் நீக்கப்பட்டனர். இவர்களில் யாராவது உண்மையான அசாம் மாநிலத்தவராக இருந்தால், அவர்கள் முறையான ஆவணங்களை தாக்கல் செய்து மீண்டும் குடியுரிமை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.

amit shah

இதுகுறித்து, இரண்டு நாட்கள் பயணமாக வடகிழக்கு மாநிலங்களுக்குச் சென்றுள்ள உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்து தெரிவித்துள்ளார். 
இதுதொடர்பாக அவர் பேசும்போது, தேசிய குடிமக்கள் பட்டியல் குறித்து அனைத்து மாநிலங்களும் கலக்கத்தில் உள்ளன. அசாம் மாநிலம் என்.ஆர்.சி. தவறு என்று மற்ற மாநிலங்கள் நினைக்கின்றன. தேசிய குடிமக்கள் பட்டியல் மூலம் நிறைய பேர் விடுபடும் அபாயம் இருக்கிறது என்று நினைக்கின்றனர். 
அசாமில் நீக்கப்பட்டவர்கள், அசாமை விட சிறு மாநிலங்களுக்கு படை எடுக்கலாம் என அஞ்சுகிறேன். இந்த நேரத்தில் நான் ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்த விரும்புகிறேன். அசாம் குடிமக்கள் பட்டியலில் இடம் பெறாதவர்கள், அசாமில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் வசிக்க முடியாது. அசாம் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தேசத்திலும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் களையெடுக்கப்படுவார்கள். சட்டவிரோதமாக குடியேறியவர்கள், அசாமில் மட்டுமல்ல வேறு எந்த மாநிலத்திலும் இருக்க முடியாது’ என்று தெரிவித்திருக்கிறார்.