இனி கட்டணம் கேட்பீயா? சுங்கசாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் உறுப்பினர்!

 

இனி கட்டணம் கேட்பீயா? சுங்கசாவடியை அடித்து நொறுக்கிய நாம் தமிழர் உறுப்பினர்!

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் ஆவேசமாக கண்ணாடியை அடித்து நொறுக்கும் காட்சி, அந்த சுங்கசாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த மோதலால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தமிழகத்தில் ஆளுங்கட்சியையோ, மத்திய அரசையோ எதிர்த்து நடத்தும் எந்த போராட்டம் என்றாலும், மீடியாக்களின் வளர்ச்சியினால், அரசியல் கட்சிகள் முதலில் கையில் எடுப்பது தமிழகம் முழுவதும் இருக்கும் சுங்க சாவடிகளைத் தான். இவர்கள் போராட்டம் நடத்துவதற்கும், அந்த போராட்டத்தினால், இத்தனை மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, மக்கள் இத்தனை கஷ்டப்பட்டார்கள், சென்னையே ஸ்தம்பித்தது போன்ற புகழ்ச்சி வார்த்தைகளைக் கேட்பதற்காக திமுக, மதிமுக, பாமக உட்பட பெரும்பாலான கட்சிகள் அஸ்திரமாக சுங்கசாவடிகளை கையில் எடுக்கின்றன.

இந்நிலையில், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள், கட்சிப் பதவிகளில் இருப்பவர்கள் சுங்கச்சாவடிகளைக் கடக்கும் போது பெரும்பாலும் சுங்கக் கட்டணங்களைச் செலுத்தாமல், காரில் பறக்கும் கட்சிக் கொடியைக் காட்டி தகராறு செய்து வருவதும் வாடிக்கையான ஒன்றாகவே இருக்கிறது. இந்நிலையில், செங்கல்பட்டு அருகே சுங்கக்கட்டணம் கேட்டதால் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள், சுங்கக்கட்டணம் செலுத்தாமல் தகராறு செய்து, சுங்கசாவடியின் பூத் கண்ணாடியை உடைத்து சென்றனர். சுங்கசாவடி

நேற்று மாலை, விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த நாம் தமிழர் கட்சினர் தனித்தனியே மூன்று கார்களில் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது சென்னைக்கு வரும் வழியில், செங்கல்பட்டு அடுத்த உள்ள பரனூர் சுங்கச்சாவடியில், சுங்க கட்டணம் செலுத்த மறுத்திருக்கிறார்கள். இதனால் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த ஒருவர் கட்டணம் வசூலிக்கும் பூத் கண்ணாடியை அடித்து உடைத்தார்.

நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர் ஆவேசமாக கண்ணாடியை அடித்து நொறுக்கும் காட்சி, அந்த சுங்கசாவடியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது. இந்த மோதலால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.  தகவலறிந்து சென்ற செங்கல்பட்டு தாலுகா காவல்துறையினர் இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.