இனி கட்சியை நம்பி பிரயோஜனமில்லை… மக்கள் சேவையில் இறங்கிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்! அதிர்ச்சியில் அதிமுக கரைவேட்டிகள்!

இனி கட்சியை நம்பி பிரயோஜனமில்லை… மக்கள் சேவையில் இறங்கிய துணை முதல்வர் ஓ.பி.எஸ்! அதிர்ச்சியில் அதிமுக கரைவேட்டிகள்!

‘கொன்றால் பாவம் தின்றால் போச்சு’ என்ற நம்ம ஊர் கிராமங்களில் ஒரு சொல் வலம் வந்துக் கொண்டிருக்கிறது. இந்த பழமொழியையும்  வேற ஏதாவது மருத்துவமனையையும் உங்க மனசுல முடிச்சுப் போட்டு யோசிச்சீங்கன்னா… நாங்க பொறுப்பில்லை… விஷயம் என்னன்னா… பாராளுமன்ற தேர்தல்ல… ஓபிஎஸ் மகனைத் தவிர மற்ற எல்லா தொகுதிகளிலுமே ஆளும் அதிமுக கட்சி மண்ணை கவ்வியது.

ops

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு பிறகு கட்சி தள்ளாடி ஓபிஎஸ் ஜெ சமாதியில் தியானம் எல்லாம் இருந்து,எடப்பாடி முதல்வராகி, சசிகலா சிறை சென்று, டிடிவி  ஒற்றையாளாய் புதுக்கட்சி துவங்கி என ஏகப்பட்ட எதிர்பாரா திருப்பங்களுடனே இருந்து வந்தது. இந்நிலையில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை அதிமுக, பாஜக வுடன் கூட்டணி அமைத்து சந்தித்தால், நமக்கு வாக்குகள் விழுமோ, விழாதோ என்கிற மனநிலையில் ஒவ்வொரு அதிமுக அமைச்சருமே இருக்கிறார்கள்.
தேனி மாவட்டத்தில் 30 நீர்நிலைகளைச் சுமார் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், குடிமராமத்துப் பணியின் கீழ் தூர்வாரி வருகிறது தமிழக அரசு. அரசு செய்து வரும் குடிமராமத்துப் பணிக்கு இணையாக, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தமது சொந்தச் செலவில் தேனி மாவட்டத்தில் 10 நீர்நிலைகளைத் தூர்வாரி வருகிறார். ஆண்டிபட்டி மயிலாடும்பாறை, கோவிலான்குளம், கோடாங்கிபட்டி, கணக்கண்குளம், தாடிச்சேரிக் கண்மாய், ஜங்கால்பட்டி, வண்ணான்குளம், எரசை நாயக்கன்குளம், வெப்பங்கோட்டை மாசாணம்குளம், மீனாட்சிபுரம் செட்டிகுளம், தென்கரை பாப்பையன்பட்டிகுளம், பாலகோம்பை ஊசிமலைக்கண்மாய், தேவாரம் பெரியதேவிக் குளம் ஆகிய நீர்நிலைகளில் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், மக்கள் பணியைச் செய்தால் தான் தொகுதி மக்கள் நம்மை மதிப்பார்கள் என்று களத்தில் இறங்கிவிட்டார் தானே… இதைப் போலவே எல்லா எம்பிக்களும் களத்தில் இறங்கி உண்மையாகவே மக்கள் பணியைச் செய்தால் நாடு நன்றாக தான் இருக்கும்.