இனி ஒன் நேஷன் ஒன் பேங்க் தான்! 27லிருந்து 12ஆக குறைக்கப்படும் பொதுத்துறை வங்கிகள் – நிர்மலா சீதாராமன் அதிரடி

இனி ஒன் நேஷன் ஒன் பேங்க் தான்! 27லிருந்து 12ஆக குறைக்கப்படும் பொதுத்துறை வங்கிகள் – நிர்மலா சீதாராமன் அதிரடி

பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27லிருந்து 12ஆக குறைக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27லிருந்து 12ஆக குறைக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய நிர்மலா சீதாராமன், “நாட்டின் பொருளாதார வளர்ச்சி ஏப்ரல் – ஜூன் வரையிலான காலாண்டில் 5% ஆக குறைந்தது. பொருளாதார வளர்ச்சி 5 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைந்துள்ளது, இந்தியன் வங்கி மற்றும் அலகாபாத் வங்கி ஒன்றாக இணைக்கப்படும், பஞ்சாப் நேஷனல் வங்கி, ஓரியண்டல் வங்கி, யுனைடெட் வங்கி ஆகியவை ஒன்றாக இணைக்கப்படுகின்றன. 

Nirmala

இதேபோல் கனரா வங்கியும், சிண்டிகேட் ஆகியவை ஒன்றாக இணைக்கப்பட்டுள்ளன. மேலும் ஆந்திரா வங்கி, யூனியன் வங்கி, கார்ப்பரேஷன் வங்கி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைக்கப்படவுள்ளன. பொதுத்துறை வங்கிகள் எண்ணிக்கை 27லிருந்து 12ஆக குறைக்கப்படுகிறது. நஷ்டத்தில் இயங்கும் வங்கிகளின் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட மாட்டார்கள்” என்றும் தெரிவித்துள்ளார்.