இனி என் 50 வயதில் தான் சபரிமலை வருவேன் – 9 வயது சிறுமி அதிரடி பேட்டி!

 

இனி என் 50 வயதில் தான் சபரிமலை வருவேன் – 9 வயது சிறுமி அதிரடி பேட்டி!

சபரிமலைக்குச் சென்ற ஜனனி என்ற 9 வயது சிறுமி, தான் இனி 50 வயதிற்குப் பிறகு தான் சபரிமலைக்கு வருவேன் என்று  கூறியுள்ளார். 

சபரிமலை: சபரிமலைக்குச் சென்ற ஜனனி என்ற 9 வயது சிறுமி, தான் இனி 50 வயதிற்குப் பிறகு தான் சபரிமலைக்கு வருவேன் என்று  கூறியுள்ளார். 

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியிருந்தது. அதனையடுத்து, நேற்று முன்தினம் கோயில் நடை திறக்கப்பட்ட போது, பெண்களை உள்ளே அனுமதிக்கத் தடை விதிக்கக் கோரி ஆண் பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தப் பரபரப்பான சூழ்நிலையில்  நேற்று ஐதராபாத்தைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர், எர்ணாகுளத்தைச் சேர்ந்த ஒரு பெண் என இரண்டு பெண்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோயிலுக்குள் செல்ல முயன்றனர். சன்னிதானம் நோக்கி வந்த இரண்டு பெண்களை தேவசம் போர்டு திருப்பி அனுப்பியது. மேலும், சபரிமலை சன்னிதானத்திற்கு வந்த இரண்டு பெண்களின் பின்னணியை அறியாமல் காவல்துறையினர் அனுமதித்திருப்பதாக தேவசம் போர்டு குற்றம்சாட்டியது. 

இதையடுத்து பெண்கள் கோவிலுக்கு  வருவதைத் தடுக்க, சன்னிதானத்தைப் பரிகார பூஜைகள் செய்ய நடை அடைக்கப்பட்டது. இந்நிலையில் மதுரையிலிருந்து சபரிமலைக்கு சென்ற ஜனனி என்ற 9 வயது சிறுமி, தான் இனி 50 வயதிற்குப் பிறகு தான் சபரிமலைக்கு வருவேன் என்று ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.  இது குறித்து, சிறுமியின் தந்தை  ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்துள்ள பேட்டியில், ‘உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்கியது என்று எங்களுக்குத் தெரியாது. எனது மகளுக்கு 10 வயது முடிந்தவுடன், அவள் மீண்டும் தனது 50 வயது நிறைவடைந்த பிறகு தான் சபரிமலைக்கு வருவாள். அது வரை காத்திருப்பாள்’  என்று கூறியுள்ளார்.

sabarimala

விளம்பரம் தேடிக்கொள்ள மாற்று மத பத்திரிக்கையாளர்கள் மற்றும் பெண்ணியவாதிகள் போட்டி போட்டு கொள்ளும் தருணத்தில், தனது உண்மையான பக்தியையும் சபரிமலை கோவிலின் தொன்று தொட்ட பழக்கவழக்கத்தையும் சிறுமி வெளிப்படுத்தியுள்ளதாகப் பலரும் பாராட்டி வருகின்றனர்.