இனி இந்த கெடுபிடியெல்லாம் இருக்காது: தமிழக காவல்துறை

 

இனி இந்த கெடுபிடியெல்லாம் இருக்காது: தமிழக காவல்துறை

உலகில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

உலகில் பல்வேறு நாடுகளில் வேகமாக பரவி வரும் கொரோனா நோய் தொற்றை தடுக்கும் பொருட்டு உலக நாடுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் யாரும் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும் சிலர் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல் வெளியே நடமாடி வருகிறார்கள். சாலை மற்றும் வான்வழிப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

Police check

​இதுகுறித்து தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “அத்தியாவசிய சரக்கு வாகனங்களை தடுத்து நிறுத்தப்படமாட்டாது. பொருட்களை எடுத்துச்செல்ல பயன்படுத்தப்படும் வாகனங்கள் காலியாக சென்றாலும் தடுக்க மாட்டோம். பாதுகாப்பு பணியில் இருக்கும் காவலர்கள் சரக்கு வாகன ஓட்டுநர்களிடம் பாஸ் காட்டச்சொல்லி நிறுத்த மாட்டார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.