இனி இதுதான் நடக்கும்….. இரண்டாய் பிரியும் காஷ்மீரில்

 

இனி இதுதான் நடக்கும்….. இரண்டாய் பிரியும் காஷ்மீரில்

ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு அந்தஸ்தை நீக்கியதோடு, அதனை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன்களாக பிரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்தது. இதனால் அங்கு என்னென்ன மாற்றங்கள் நிகழ வாய்ப்புகள் உள்ளது என்பது தொடர்பான அரசல் புரசலான கருத்துக்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

காஷ்மீர் மாநிலம் இனி இரண்டு யூனியன் பிரதேசங்களாக மாறுவதால் முதல் ஆப்பை வாங்க போவது பிரிவினைவாத குழுக்கள்தான். பிரிவினைவாதிகள் இனி 3 குழுக்களாக பிரிய வாய்ப்புள்ளது. பிரிவினைவாதிகள் சிலர் ஜம்முவிற்காக போராடுவார்கள். சிலர் காஷ்மீருக்காகவும், சிலர் லடாக்கிற்காகவும் போராடுவார்கள். ஆக பிரிவினைவாதிகளுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிளவு ஏற்படும்.

பிரிவினைவாத குழு தலைவர்கள்

அடுத்து, தீவிரவாதிகள் இனி எங்கு செயல்படுவது என்று தெரியாமல் குழம்பும் நிலை ஏற்படும். மேலும், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு எங்கு ஆக்ரமிப்பு செய்வது, எந்த பகுதியில் கவனம் செலுத்துவது என்று தெரியாமல் திணறும். லடாக்கில் சீனாவின் ஆக்கிரமிப்பை கட்டுப்படுத்தவும் இது உதவும். காஷ்மீரில் மட்டும் படைகளை குவிக்க மத்திய அரசு உதவியாக இருக்கும். நிர்வாக ரீதியாகவும் இரண்டு பகுதிகளையும் எளிதாக நிர்வகிக்க முடியும். 

சீன ராணுவம்

மாநிலம் இரண்டாக பிரிவதால் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த மாநில கட்சிகளின் பலம் குறையும். மேலும், கொஞ்சம் கொஞ்சமாக பா.ஜ. செல்வாக்கு அதிகரிக்க வாய்ப்புள்ளதால், வருங்காலத்தில் அங்கு பா.ஜ. தனிபெரும் கட்சியாக உருவெடுக்க அதிக வாய்ப்புள்ளது.