இனி அமைச்சர்களின் வீட்டு வாடகை ரூ. 1 லட்சமாம்… மக்கள் பணத்தை வாரி இறைக்கும் ஹரியானா அரசு !

 

இனி அமைச்சர்களின் வீட்டு வாடகை ரூ. 1 லட்சமாம்… மக்கள் பணத்தை வாரி இறைக்கும் ஹரியானா அரசு !

கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, அமைச்சர்களுக்கான வீட்டு வாடகை ரூ.50 ஆயிரமாக இருந்து வருகிறது. 

ஹரியானா மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தலைமையில் கூடிய அமைச்சரவை கூடியது. அதில், அமைச்சர்களுக்கான சலுகைகள் சட்டம் 1972 ல் திருத்தம் மேற்கொள்ளப்போவதாகத் தெரிவிக்கப்பட்டது. அந்த சட்டத்தில், கடந்த 2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, அமைச்சர்களுக்கான வீட்டு வாடகை ரூ.50 ஆயிரமாக இருந்து வருகிறது. 

mohanlal kattar

இது குறித்து அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பாணையில், அமைச்சர்களின் வீட்டு வாடகை இரட்டிப்பாக உயர்த்தப்போவதாகத் தெரிவித்துள்ளது. அதாவது, தற்போது ரூ.50 ஆயிரமாக இருந்து வரும் வாடகை கூடுதலாக 30 ஆயிரம் உயர்த்தப்பட்டு ரூ. 80 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும்  தண்ணீர் மற்றும் மின்சார கட்டணமாக 20 ஆயிரம் ரூபாயையும் சேர்த்து மொத்தமாக ரூ. 1 லட்சம் வாடகையாகச் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.