இனி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே சுழற்சி முறை!

 

இனி அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளிலும் ஒரே சுழற்சி முறை!

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேரம் என்ற இரு சுழற்சி முறையை ரத்து செய்து, ஒரே சுழற்சியில வகுப்புகளை நடத்த உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலை மற்றும் மாலை நேரம் என்ற இரு சுழற்சி முறையை ரத்து செய்து, ஒரே சுழற்சியில வகுப்புகளை நடத்த உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

 ஒரே சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்தும்போது அவசியப்படும் வசதிகளை ஏற்படுத்த நிதி ஒப்பளிப்பு அளிக்க வேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் உயர்கல்வித் துறை செயலாளருக்கு எழுத கடிதத்தில் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. காலை நேரக் கல்லூரி வகுப்புகள் காலை 7.30 மணிக்கெல்லாம் தொடங்குவதால், காலை உணவை சாப்பிடாமல் பல மாணவர்கள் வகுப்புகளுக்கு வருவதாகவும், அதனால் ரத்த சோகை போன்ற பிரச்னைகளால் மாணவர்கள் பாதிக்கப்படுவதாலும் இந்த முடிவை எடுத்திருப்பதாக கல்லூரிக் கல்வி இயக்குநர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். எனவே, 2006ஆம் ஆண்டுக்கு முன்பிருந்த நடைமுறைப்படி, காலை 9.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை கல்லூரிகளை நடத்த முடிவு செய்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

college students

இந்நிலையில்  அரசுக் கல்லூரிகளுக்கு கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள், மேசை நாற்காலிகள் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த சட்டப்பேரவையில் முதல்வரால் 150 கோடி ரூபாய்க்கு அறிவிப்பு வெளியானது. இதனால் ஒரே சுழற்சி முறை வகுப்பிற்கு, கட்டமைப்பு வசதிகள் தேவைப்படுவதால், முதல்வரால் அறிவிக்கப்பட்ட 150 கோடி ரூபாய்க்கு நிர்வாக ஒப்புதல் அளிக்க வேண்டும் என உயர்கல்வித் துறை செயலாளருக்கு அந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது.