இனி அத்திவரதரை தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம்- ஆட்சியர் அறிவிப்பு!

இனி அத்திவரதரை தரிசிக்க 2 நாட்கள் கூட ஆகலாம்- ஆட்சியர் அறிவிப்பு!

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் எழுந்தருளியுள்ள அத்திவரதரை தரிசிக்க, வரும் நாட்களகளில் 2 நாட்கள் கூட காத்திருக்க நேரலாம் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார். 

அத்திவரதர் வைபவத்தின் 38ஆவது நாளான இன்று, மஞ்சள் மற்றும் மெஜந்தா நிற பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அத்திவரதர் காட்சி தருகிறார். கடந்த 2 நாட்களை ஒப்பிடும்போது இன்று கூட்டம் சற்று குறைவாக உள்ளது என்றும் சுவாமியை தரிசிக்க கோயில் வளாகத்திற்குள்  வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு  5 முதல் 6 மணி நேரம் வரை ஆகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோயிலுக்கு வெளியே கூடாரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்ய 2 நாட்கள் கூட ஆக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16 மற்றும் 17ஆம்‌தேதிகளில் விஐபி தரிசனம் ரத்து செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். கடந்த 37 நாட்களில் 52 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்து உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

athivardar

அத்திவரதர் வைபவத்தில் பாதுகாப்புப் பணியில் காவலர்கள், சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு படித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.