இனிமே வீட்டுக்கு 2 பாக்கெட் உப்பு எக்ஸ்ட்ரா வாங்குங்க… எதுக்குன்னு தெரியுமா?…

 

இனிமே வீட்டுக்கு 2 பாக்கெட் உப்பு எக்ஸ்ட்ரா வாங்குங்க… எதுக்குன்னு தெரியுமா?…

பற்களைப் பளிச்சிடச் செய்யவும் இந்த உப்பு பயன்படும். ஒரு ஸ்பூன் உப்பையும் இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடரையும் சேர்த்து கரைத்து பிரஷ்ஷால் அந்த பேஸ்ட்டை எடுத்து பல் துலக்குங்கள். பிறகு உங்கள் பற்கள் முத்துப் போல் பிரகாசிக்கும்.

உப்பு இல்லாத பண்டம் குப்பையிலே என்று தான் பழமொழி கேட்டிருப்போம். டூத் பேஸ்ட்ல உப்பு வந்திருச்சி. ஆனா உப்பு இல்லாத முகம் அவ்வளவு கலரில்ல என்று சொன்னால் எப்படியிருக்கும். ஆமாங்க.. முகத்துக்கு உப்பு பயன்படுத்துறதால முகத்தின் நிறம் அதிகமாகும் என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம்.

உப்பு நம்முடைய சருமத்தின் பாதுகாப்பை அதிகரிக்கும். சரும வறட்சியைத் தடுக்கும். அரை கப் ஆலிவ் ஆயிலை எடுத்துக் கொண்டு, அதோடு கால் கப் கல் உப்பை கலந்து சிறிதுநேரம் ஊறவைத்து திக்கான பேஸ்ட்டாக கலந்து கொள்ள வேண்டும்.

அதை உடல் முழுவதும் ஸ்கிரப் போல தேய்த்து பின் வெதுவெதுப்பான நீரில் கழுவுங்கள். அல்லது வெதுவெதுப்பான நீரில காட்டன் டவலை நனைத்துத் துடைத்தெடுங்கள். எண்ணெய் வழிகிற சருமமாக இருந்தால்  இரண்டு ஸ்பூன் உப்பை எடுத்து தேனில் நன்கு குழைத்து முகத்தில் தடவி, நன்கு உலர விடுங்கள். 15 நிமிடங்கள் கழித்து மிதமான வெதுவெதுப்புடன் கூடிய நீரில் முகத்தைக் கழுவ, முகம் பளிச்சென இருப்பதை நீங்களே உணர்வீர்கள். 

saltss

சருமத்துக்கு மட்டுமல்ல தலைமுடி பிரச்னைக்கும் உப்பு சிறந்த தீர்வாக அமையும். தலையில் பொடுகு ஏதேனும் இருந்தால் சிறிதளவு தேங்காய் எண்ணெயில் சிறிது கல் உப்பைக் கலந்து அதை முடியின் வேர்க்கால்களில் தடவி, 10 நிமிடங்கள் வரை நன்கு விரல்களால் மசாஜ் செய்யுங்கள். பின்பு தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசுங்கள்.

உங்களுடைய நகங்கள் வலுவிழந்து காணப்பட்டால் அதற்கும் உப்பு பெரும் உதவியாக இருக்கும். உங்கள் நகங்கள் வலுவுடையதாகவும் பளிச்சென அழகாகவும் இருக்க வேண்டுமானால், அரை கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு ஸ்பூன் உப்பு, ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா, ஒரு ஸ்பூன் லெமன் ஜூஸ் ஆகியவற்றைச் சேர்த்து கலந்து விரல்களை அதில் வைத்து 10 நிமிடங்கள் வரை ஊறவிடுங்கள். பின் மென்மையான பிரஷ் கொண்டு தேய்த்துக் கழுவுங்கள். பிறகு பாருங்கள் உங்களுடைய மென்மையான எழில் கொஞ்சம் நகங்களை.

பற்களைப் பளிச்சிடச் செய்யவும் இந்த உப்பு பயன்படும். ஒரு ஸ்பூன் உப்பையும் இரண்டு ஸ்பூன் பேக்கிங் பவுடரையும் சேர்த்து கரைத்து பிரஷ்ஷால் அந்த பேஸ்ட்டை எடுத்து பல் துலக்குங்கள். பிறகு உங்கள் பற்கள் முத்துப் போல் பிரகாசிக்கும். இதே கலவையில் இன்னும் கொஞ்சம் அதிகமாக நீர் சேர்த்தால் அதையே மௌத் வாஷ்ஷாகவும் பயன்படுத்தலாம்.