‘இனிமே லாஸ்லியா கிட்ட பேசுனீங்க நான் கடுப்பா ஆகிடுவேன்’ : சேரனிடம் கோபப்பட்ட மகள்!

 

‘இனிமே லாஸ்லியா கிட்ட பேசுனீங்க நான் கடுப்பா ஆகிடுவேன்’ : சேரனிடம் கோபப்பட்ட மகள்!

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது  புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

cheran

பிக் பாஸ் 3 தமிழ் நிகழ்ச்சி 81 வது நாளை தொட்டுள்ளது. பிக் வீட்டில் இரண்டு நாட்களாக  ஃப்ரீஸ் டாஸ்க் நடந்து வருகிறது. முகினின்  அம்மா நிர்மலா மற்றும் தங்கை ஜனனி பிக் பாஸ் வீட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து தொடர்ந்து நேற்றைய நிகழ்ச்சியில்  லாஸ்லியாவின்  குடும்பத்தினர் வந்திருந்தனர். அதேபோல் இதற்கு முன்பு வெளியான இரண்டு புரொமோகளிலும் தர்ஷன் மற்றும் வனிதாவின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் விசிட் அடித்திருந்தனர். 

cheran

இந்நிலையில் பிக் பாஸ் 3 தமிழ் இன்றைய நிகழ்ச்சிக்கான மூன்றாவது   புரொமோ  வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், சேரனின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டுக்குள் வந்துள்ளனர். அதில் சேரனின் மகள் அவரிடம், ‘நீ  லாஸ்லியா மேல அதிகம் கேர் எடுத்துக்குற. பொண்ணுன்னு சொல்லிட்டா எல்லாரும் புள்ளையா ஆகிட முடியாது டாடி. அதற்கு சேரனோ, சரி, நம்ம விட்டு கொடுப்போம் என்று அவரை சமாதானம் செய்ய, விட்டு கொடுக்குறது வேற. அவங்க விட்டு கொடுத்துத்தான் பேசிட்டு இருக்காங்க.

 

முதல் முதலா நீங்க புள்ளன்னு சொல்லும் போது, அது விட்டு கொடுத்து இங்க உக்காந்துட்டு சிரிச்சிகிட்டு இருக்கு. அது தப்பு. அதுக்கப்புறமும் வந்து சேரன் அப்பான்னா? நீங்க தான் நம்பிட்டு இருக்கீங்க. உங்ககிட்ட அதுதான் ஒண்ணே ஒன்னு மைனஸ். அந்த அஞ்சுபேருல அவங்க ரெண்டு பேர விட்டுடுங்க. இதுக்கு அப்புறமும் நீங்க அவகிட்ட பேசுனீங்கன்னா அப்புறம் நான் டென்க்ஷன்  ஆகிடுவேன்’ என்கிறார்.