இனிமே ரிவியூ பார்க்காமல் படம் பார்க்கமாட்டேன்: என்.ஜி.கே படம் குறித்து ரசிகர்கள் கருத்து!

 

இனிமே ரிவியூ பார்க்காமல் படம் பார்க்கமாட்டேன்: என்.ஜி.கே படம் குறித்து ரசிகர்கள் கருத்து!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.  

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள என்.ஜி.கே திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது.  

முதல் முறையாக சூர்யா- செல்வராகவன் காம்போவில் உருவாகியுள்ள திரைப்படம் என்.ஜி.கே. எஸ். ஆர்.பிரபு தயாரித்துள்ள இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் நடித்துள்ளனர். அரசியலை மையப்படுத்தி உருவாகியுள்ள இதில் சூர்யா அரசியல் வாதியாக நடித்துள்ளார். 

இந்த நிலையில் இப்படம் இன்று அதிகாலை வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்காக வருடக்கணக்கில் காத்திருந்த ரசிகர்கள் திரையரங்கு முன்பு மேல தாளங்களுடன் பட்டாசு வெடித்துப் கொண்டாடினர். படம் பார்த்து வெளியே வந்த ரசிகர்களும் படத்தைப் பற்றி சொன்ன கருத்துக்களைக் காணலாம்