இனிமே நீ தீப்பொறி ஆறுமுகம் கிடையாது வெறும் ஆறுமுகம்தான் – காங்கிரஸ் கலகல‌

 

இனிமே நீ தீப்பொறி ஆறுமுகம் கிடையாது வெறும் ஆறுமுகம்தான் – காங்கிரஸ் கலகல‌

முந்தைய ராஜஸ்தான் மாநில பாஜக அரசு ஆட்சியின்போது, அம்மாநில கல்வி பாடத்திட்டத்தில் இந்துத்துவத்திற்கு அனுகூலமான‌ சில மாற்றங்களை கொண்டுவந்தது

முந்தைய ராஜஸ்தான் மாநில பாஜக அரசு ஆட்சியின்போது, அம்மாநில கல்வி பாடத்திட்டத்தில் இந்துத்துவத்திற்கு அனுகூலமான‌ சில மாற்றங்களை கொண்டுவந்தது. இந்து மகா சபை தலைவரான சாவர்க்கரை, அம்மாநில பாடப்புத்தகங்களில் சுதந்திர போராட்ட தியாகியாக்கி அழகு பார்த்தது. கடந்த ஆண்டு ராஜஸ்தானில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ் கட்சி, முதல் வேலையாக பாடத்திட்ட சீர்திருத்தக் குழு ஒன்றை அமைத்தது.

bjop

பாஜக ஆட்சியில் வெறும் சாவர்க்கர், வீர சாவர்க்கராக திருநாமம் சூட்டப்பட்டதை, இந்த பாடத்திட்ட சீர்திருத்தக்குழு, “இனிமேல் நீ தீப்பொறி ஆறுமுகம் இல்ல, வெறும் ஆறுமுகம்தான்” என ஜஸ்ட் லைக் தட்டாக‌ மாற்றிவிட்டது. இதற்கு காரணம் கூறும் அம்மாநில கல்வித்துறை அமைச்சர், ‘தன்னுடைய விடுதலைக்காக பிரிட்டிஷ் அரசிடம் மன்னிப்பு கடிதம் எழுதியவரும், தான் விடுதலை செய்யப்பட்டால் பிரிட்டிஷாருக்கு விசுவாசமாக இருப்பதாகவும் சலுகை கோரியவரை எப்படி வீரராக கருத முடியும்’ என லாஜிக்கலாக கேள்வி கேட்டுள்ளார்.

bjp

பாடப்புத்தக சீர்திருத்தக் குழு அரசியல் நெருக்கடி காரணமாக இப்படி செயல்படவில்லை என்றும், பிரிட்டிஷாரிடம் சாவர்க்கர் மன்னிப்பு கேட்டதற்கான சரியான ஆதாரங்களை பாடநூலில் சேர்த்துள்ளது என்றும் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. இதுல காமெடி என்னன்னா, போன வருஷம் ஏழாம் வகுப்புல வீர சாவர்க்கரை பற்றி நச்சுன்னு நாலு வரி எழுதுங்க என்ற கேள்விக்கு பதில் எழுதி முழு மதிப்பெண் பெறும் அதே மாணவர், எட்டாம் வகுப்பில் அதே சாவர்க்கரைப் பற்றி வேறு மாதிரி எழுத வேண்டியிருக்கும்.