இனிமே தமிழ் ராக்கர்ஸ் கிடையாது? டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

 

இனிமே தமிழ் ராக்கர்ஸ் கிடையாது? டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழ் ராக்கர்ஸ் உள்படப் படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

சென்னை: தமிழ் ராக்கர்ஸ் உள்படப் படங்களைத் திருட்டுத்தனமாக வெளியிடும் இணையதளங்களை முடக்க டெல்லி உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, ஹாலிவுட் என்று எந்த மொழிப்படங்கள் வந்தாலும் ஓரிரு நாட்களில் திருட்டுத்தனமாகத் தமிழ்  ராக்கர்ஸ் இணையத்தில் வெளியாகின்றன. கால்நடையாகச் சென்று படம் பார்த்த காலம் போகி மக்கள் இணையத்தில் பார்க்கவே விரும்புகின்றனர். பல கோடி ரூபாய் செலவு செய்து எடுக்கப்படும் படங்கள் ரிலீஸான சில மணி நேரத்திலேயே இணையதளங்களில் வெளியாவது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை மட்டுமின்றி நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. 

தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களால் தடை செய்ய எத்தனையோ முயற்சிகள் செய்தும் அனைத்தும் தோல்வியை தழுவியுள்ளது. இந்த நிலையில் தங்களது திரைப்படங்களை, தொலைக்காட்சி தொடர்களைச் சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிடுவதால் நஷ்டம் ஏற்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த வார்னர் பிரதர்ஸ் தயாரிப்பு நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. 

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சஞ்சீவ் நருலா தமிழ் ராக்கர்ஸ், லைம்டோரண்ட்ஸ் உள்ளிட்ட இணையதளங்களுக்குத் தடை விதிக்குமாறு இணையதள நிறுவனங்களுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார். மேலும் இது போன்று சட்டவிரோதமாகப் படங்களை இணையதளங்களில் பதிவேற்றி வரும் தமிழ் ராக்கர்ஸ் உள்ளிட்ட இணையதளங்களை முடக்க முடியுமா? என்று கேள்வியையும் எழுப்பியுள்ளார்.