‘இனிமே எப்படி தப்பிப்பிங்க’.. புலி, சிறுத்தைகளைப் பிடிக்க வனத்துறையினரின் புது டெக்னிக் !

 

‘இனிமே எப்படி தப்பிப்பிங்க’.. புலி, சிறுத்தைகளைப் பிடிக்க வனத்துறையினரின் புது டெக்னிக் !

வழக்கமாகக் காப்பகத்திலிருந்து தப்பிக்கும் விலங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் வைத்துப் பிடிப்பர்.

கோவை மாவட்டம் சத்தியமங்கலம் வனக் காப்பகத்தில் இருக்கும் புலிகளும், சிறுத்தைகளும் அடிக்கடி தப்பித்து ஊருக்குள் புகுந்து விடுகின்றன. அதுமட்டுமல்லாமல் அப்பகுதிகளில் இருக்கும் ஆடு, மாடுகளையும் இரையாக்கிக் கொள்கின்றன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

ttn

வழக்கமாகக் காப்பகத்திலிருந்து தப்பிக்கும் விலங்குகளை வனத்துறையினர் கூண்டுகள் வைத்துப் பிடிப்பர். ஆனால், அந்த விலங்குகள் கூண்டுகளைக் கண்டுபிடித்து அதிலிருந்து தப்பி விடுவதால், அவைகளைப் பிடிப்பது எளிதான காரியம் அல்ல. அதனால் வனத்துறையினர் ஒரு புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளனர். \

 




புலி மற்றும் சிறுத்தைகள், வேட்டையாடுவதற்காகச் செல்லும் ஆட்டுக் கொட்டகைகளைப் போலவே கூண்டுகளை வடிவமைத்துள்ளனர். அதில், மர வண்ணத்தில் வண்ணம் பூசப்பட்டு, தென்னங்கீற்றுகளைக் கொண்டு மேற்கூரையும் அமைத்துள்ளனர். அது பார்ப்பதற்கு ஆட்டுக் கொட்டகை போலவே  காட்சியளிக்கிறது. இதன் மூலம், காப்பகத்தில் இருந்து தப்பிக்கும் விலங்குகளை எளிதாகப் பிடிக்கலாம் என்று வனத்துறையினர் உறுதியாகத் தெரிவித்துள்ளனர்.