“இனிமேல் டிராபிக் போலீஸ் ஊத சொல்ல மாட்டாங்க.. போதையில் இருந்தாலும் கூட” : கொரோனா வைரஸின் எதிரொலி!

 

“இனிமேல் டிராபிக் போலீஸ் ஊத சொல்ல மாட்டாங்க.. போதையில் இருந்தாலும் கூட” : கொரோனா வைரஸின் எதிரொலி!

டிராபிக் போலீஸ் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி, குடித்திருக்கிறார்களா என்று சோதனை செய்ய ஊதச் சொல்ல வேண்டாம்.

100க்கு மேற்பட்ட உலக நாடுகளில் பரவி அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் பரவியுள்ளது. இந்தியாவில் சுமார் 60க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் முதன்முதலாக  கொரோனாவால் சவுதியிலிருந்து திரும்பிய 70 வயது முதியவர் உயிரிழந்த உடன், மக்களின் பீதி இன்னும் அதிகரித்தது.

ttn

கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு, ஒருவரிடம் இருந்து 1 மீட்டர் இடைவெளியில் இருக்க வேண்டும் என்றும் தொட்டுப் பேசக் கூடாது என்றும் கைகளை சானிடைசர் கொண்டு அடிக்கடி சுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அதிகமாகக் கூட்டம் கூடும் இடங்களில் செல்வதைத் தவிர்க்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.

 

ttn

இந்த வைரஸ் காற்றின் மூலமும், பாதிக்கப்பட்டவர்கள் சுவாசிப்பதின் மூலமாகவும் பரவுவதால் மாஸ்க் அணிந்து செல்லுமாறும், நெருங்கிப் பேசுவதைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது.

ttn

அதாவது, டிராபிக் போலீஸ் குடித்து விட்டு வாகனம் ஓட்டுபவர்களை நிறுத்தி, குடித்திருக்கிறார்களா என்று சோதனை செய்ய ஊதச் சொல்ல வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு, வாகன ஓட்டிகளுக்கு கொரோனா தொற்று இருந்தால் அது காவலர்களுக்கும் பரவும் என்ற நோக்கில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம், கொரோனா தொற்று பரவுவது தடுக்கப் படுகிறதோ இல்லையோ.. குடிமகன்களுக்கு இன்பமான செய்தியாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.