இனிமேல் டாஸ்மாக்கில் டோக்கன் முறை.. ஒரு நாளைக்கு ஒன்று வீதம் 7 வண்ண டோக்கன் தயார்!

 

இனிமேல் டாஸ்மாக்கில் டோக்கன் முறை.. ஒரு நாளைக்கு ஒன்று வீதம் 7 வண்ண டோக்கன் தயார்!

எப்படி மது விற்பனை செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

ஊரடங்கில் எப்போது தான் கடைகள் திறக்கப்படும் என்று காத்துக் கிடந்த குடிமகன்களுக்காக சென்னை உயர்நீதிமன்றத்தின் பல கட்டுப்பாடுகளுடன் கடந்த 7 ஆம் தேதி டாஸ்மாக் திறக்கப்பட்டது. 40 நாட்களுக்கு பிறகு மதுக்கடை திறந்ததால் திறக்கப்பட்ட முதல் நாளே கூட்டம் குவிந்தது. அதன் காரணமாக, கடந்த 8ஆம் தேதி தொடரப்பட்ட அவசர வழக்கில் மதுக்கடைகளை மூடுமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. 

ttn

இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அதில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, எப்படி மது விற்பனை செய்ய வேண்டும் என்பதை அரசே முடிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் கூட்ட நெரிசலை தவிர்க்க டோக்கன் முறையில் மது பானம் வழங்க, ஒரு நாளைக்கு ஒன்று என்ற வீதத்தில் 7 நிறங்களில் டோக்கன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் வாதாடிய வழக்கறிஞர் டோக்கன் முறையில் மதுவிற்பனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.